திருமுல்லைவாயிலில் ரூ. 65 லட்சம் நில மோசடி: 3 பேர் கைது

திருமுல்லைவாயிலில் ரூ. 65 லட்சம் நில மோசடி: 3 பேர் கைது


ஆவடி, பிப். –


திருமுல்லைவாயிலில் ரூ. 65 லட்சம் மதிப்பிலான நிலத்தை மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.


திருமுல்லைவாயல் விவேகானந்தா நகர், ரோஜா தெருவில் அமைந்துள்ள 3746 சதுரடி கொண்ட காலி மனையில் பாதி மனையை 1842 சதுர அடியை மட்டும் விலைபேசி நிலத்தின் உரிமையாளரான ஆனந்தகுமார், மோகன் என்பவரிடம் இருந்து கடந்த 31.08.2023 அன்று அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் கிரைய ஆவண எண் 12269/2023-ன் படி கிரையம் பெற்றுள்ளார்.


அந்த இடத்தை துரைபாண்டி, ராஜேஷ், எட்வின், கோபி. வெங்கடேசன், அப்துல் அசன் குத்தூஸ் மற்றும் சிலர் ஒன்று கூடி போலியான ஆவணம் தயாரித்து மனுதாரரின் சொத்திற்கும் எதிர்மனுதாரரின் சொத்திற்கும் சம்மந்தமே இல்லாத நிலையில் மனுதாரரின் நிலத்தில் அத்துமீறி நுழைந்து கம்பி வேலியை சேதப்படுத்தி போலி ஆவணங்கள் தயாரித்து மனுதாரரின் நிலத்தை அபரித்துள்ளதாகவும் நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தரக்கோரி காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது. சொத்தின் மதிப்பு ரூ.65 லட்சம் ஆகும்.


இது தொடர்பாக நிலப்பிரச்சினை விசாரணை பிரிவு காவல் ஆய்வாளர் தனம்மாள் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி அபுல் அசன் குத்தூஸ், துரைபாண்டி, கலீலூர்ரஹ்மான் ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%