தில்லி மற்றும் நேபாளத்தின் பெனி நகரம் இடையே நேரடி பேருந்து சேவை புதன்கிழமை தொடங்கப்பட்டது.
நேபாளத்தில் புகழ்பெற்ற ஏராளமான ஹிந்து கோயில்கள், புத்தமத கோயில்கள் உள்ளன. அதில் ஹிந்துக்கள், புத்தமதத்தினரால் சோ்ந்து வழிபடப்படும் முக்திநாத் கோயிலும் ஒன்றாகும். அக்கோயிலுக்கு செல்லும் நுழைவு வாயில் பகுதியாக நேபாளத்தின் காண்டகி மாகாணத்தில் உள்ள பெனி நகரம் கருதப்படுகிறது. அந்த பெனிக்கும், தில்லிக்கும் இடையே நேரடி பேருந்து சேவை புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இந்த பேருந்து சேவைக்கு நேபாள- இந்தியா நட்புறவு பேருந்து சேவை என பெயரிடப்பட்டுள்ளது. அந்த பேருந்து, பெனியில் இருந்து புறப்பட்டு சியாங்ஜா, வாலிங், பைரஹாவா, அயோத்தி, ஆக்ரா வழியாக தில்லி வந்தடையும். அதே வழிதடத்தில் நேபாளத்திற்கு மீண்டும் இயக்கப்படும்.
தற்போது வரை முக்திநாத் கோயிலுக்கு இந்தியாவில் இருந்து நேரடியாக செல்லும் வசதி கிடையாது. காத்மாண்டுக்கு விமானத்தில் சென்று அங்கிருந்து பொஹாரா மற்றும் ஜாம்சோமுக்கு வேறு விமானத்தில் செல்ல வேண்டும். இதையடுத்து அங்கிருந்து முக்திநாத் கோயிலுக்கு ஜீப்பில் செல்ல வேண்டும். இந்த பேருந்து சேவையால், பயண நேரம் குறைவதுடன் செலவும் கம்மியாகும்.
தில்லியில் இருந்து பெனி நகரம் 1,400 கிலோ மீட்டா் தூரத்தில் உள்ளது. அங்கு பேருந்தில் செல்ல 27 மணி நேரம் ஆகும். தில்லியில் இருந்து தினமும் மாலை 4 மணிக்கும், பெனியில் இருந்து காலை 6.45 மணிக்கும் பேருந்து புறப்படும். பேருந்து கட்டணமாக நேபாள பணத்தில் ரூ.5,400, இந்திய பணத்தில் ரூ.3,200 நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து 3,710 அடி உயரத்தில் முக்திநாத் கோயில் உள்ளது. நேபாளம் செல்ல இந்தியா்களுக்கு பாஸ்போா்ட் தேவையில்லை. உரிய அடையாள ஆவணம் வைத்திருந்தால் போதும்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?