" தீபம் எங்கும்
ஜொலிக்கும்
இரவு ஒளி
விழாக்கோலமாய்
வீதி வாசல் .... "
வீதி எங்கும்
வீட்டுக்கு வீடு
அகல் தீபம்
சுடர்விட்டு எரிய
மங்களம் ஆனது
மனது ... "
தொடர்ச்சியாய்
எத்தனை விளக்குகள்
மேல் மாடி
முதல் கீழ்த்
தளம் வரை
ஆஹா அழகு ... "
கோவில் வாசல்
முதல் கற்பக்கிரகம்
வரை எத்தனை
தீபங்கள் ......"
அண்ணாமலையான்
கொப்பரை தீபம்
கண்கொள்ளாக்
காட்சி "
கார்த்திகை
மாத தீபத்திருநாள்
எங்கும்
சுடர் ஒளி ..."
மண் பாண்டம்
செய்வோர் வயிறு
குளிரும்
மனமும் நிறையும் ..."
அகல் விளக்கால்
எத்தனை உருவம்
வடிவம் வழிபாடு ..."
மலை ஏறும்
பாதைப் படிகளில்
கூட அகல்
விளக்கு
ஜொலிக்கும் தமிழர்
பண்பாடு ..."
- சீர்காழி. ஆர். சீதாராமன்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?