தீபாவளிப் பண்டிகைக் கதைகள்

தீபாவளிப் பண்டிகைக் கதைகள்



  இந்துக்களுக்கு முக்கியமான பண்டிகை தீபாவளி. இந்த தீபாவளியை எந்த அடிப்படையில் மக்கள் கொண்டாடுகிறார்கள் என்று ஆய்வு செய்தால் ஒவ்வொரு காரணத்திற்காக தீபாவளியை கொண்டாடுவது தெரிகிறது. அந்தவகையில் தீபாவளி கொண்டாட்டத்திற்கு பத்துக்கும் மேற்பட்ட கதைகள் சொல்லப்படுகின்றன.


  இதில் முதன்மையானது நரகாசுரன் கொல்லப்பட்ட கதை. அட்டூழியம் செய்து வந்த நரகாசுரனை மகாவிஷ்ணு வதம் செய்து கொன்றார். இதுதான் தீபாவளிப் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.


  ராமன் வனவாசம் முடிந்து சீதையுடன் அயோத்திக்கு திரும்பிய தினத்தன்று மக்கள் நகரம் முழுக்க தீபம் ஏற்றி கொண்டாடினார்கள். இது ராமாயண தீபாவளி.


  பிரகலாதனின் பேரன் மகாபலி அவன் அரசனாக பதவி ஏற்ற தினத்தன்று நாடு முழுவதும் தீபம் ஏற்ற உத்தரவிட்டான். இதுவும் தீபாவளியாக கருதப்படுகிறது.


  மகாபலி அரசனின் ஆணவத்தை அடக்க நாராயணர் வாமன அவதாரம் எடுத்தார். மகாபலி தலை மீது காலை வைத்து பூமிக்குள் அனுப்பினார். அந்த நாளும் தீபாவளியாக கூறப்படுகிறது.


  சீக்கியர்களின் 6-வது குருவான கோவிந்தசிங் முகாலய மன்னர்களிடம் இருந்து தப்பி வந்தார். பொற்கோவிலுக்கு வந்த அவரை சீக்கியர்கள் வரிசையாக தீபம் ஏற்றி வரவேற்றனர். சீக்கியர்களுக்கு இது தீபாவளியாக உள்ளது.


  ஜைன மதக்குருவான மகாவீரர் முக்தி அடைந்த நாளை அம் மதத்து மக்கள் தீபாவளியாக கொண்டாடடுகிறார்கள். அன்றைய தினம் தீபங்களை வரிசையாகை ஏற்றி அவரது போதனைகளை மனதில் ஒளி வீச செய்கிறார்கள். அந்த நாளும் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது.


  பிரபல உஜ்ஜினி தேசத்து அரசர் விக்கிரமாதித்தன் தன் வெற்றிகளுக்குப்பின் முடிசூட்டிக்கொண்டு விக்கிரம சகாப்தத்தை ஏற்படுத்தினார். அந்த நாளும் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது.


  மராட்டிய மன்னர் சிவாஜி எதிரிகளை வென்றதும், மக்கள் கோட்டை போல கட்டி அதற்குள் விளக்கு ஏற்றி வைத்து வணங்கினார். இது தீபாவளியாக மாறியது. மும்பையில் மக்கள் தற்போதும் தீபாவளியில் மண்கோட்டை கட்டி தீபம் ஏற்றுவதை காணலாம்.


  நரகாசுரனை அழிக்க விஷ்ணு புறப்பட்டு சென்றதும் திருமகளை கவர்ந்து செல்ல அரக்கர்கள் வந்தனர். உடனே திருமகள் தீபசுடரில் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டாள். இதுவும் தீபாவளிக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.


  சக்தி 21 நாட்கள் கேதரை விரதம் இருந்தாள். இதன் மூலம் சிவன் உடம்பில் பாதி இடத்தைப் பிடித்தாள். இதுவும் தீபாவளியாக சில இடங்களில் கொண்டாடப்படுகிறது.



 -சின்னஞ்சிறுகோபு ,

   சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%