துபாயில் 25 வருட காத்திருப்புக்கு பிறகு லாட்டரியில் ரூ.9 கோடி வென்ற இந்தியர்

துபாயில் 25 வருட காத்திருப்புக்கு பிறகு லாட்டரியில் ரூ.9 கோடி வென்ற இந்தியர்


அபுதாபி: து​பாயைச் சேர்ந்த இந்​திய தொழில​திபரும் திரைப்​படத் தயாரிப்​பாள​ரு​மான ராஜன் லால் (79) சுமார் 25 வருட காத்​திருப்​புக்​குப் பிறகு லாட்​டரி​யில் ரூ.9 கோடி வென்​றுள்​ளார்.


நீண்ட கால​மாக துபா​யில் வசிக்​கும் ராஜன் லால், கடந்த ஜனவரி 30-ம் தேதி வரிப் பிடித்​தம் இல்​லாத மில்​லினி​யம் மில்​லியனர் குலுக்​கலுக்​கான லாட்​டரி சீட்டு வாங்​கி​னார். குலுக்​கலில் 3099 என்ற எண் கொண்ட அந்த லாட்​டரி சீட்​டுக்கு 10 லட்​சம் டாலர் (ரூ.9 கோடி) பரிசுத் தொகை வென்​றுள்​ளார். ராஜன் லால் புற்​று​நோ​யால் பாதிக்​கப்​பட்டு உயிர்பிழைத்​தவர். மேலும் 3 முறை மாரடைப்பு மற்​றும் இதய செயலிழப்​பால் பாதிக்​கப்​பட்​ட​வர்.


இந்​நிலை​யில் தனது 79-வது பிறந்த நாளை கொண்​டாடிய சில நாட்​களில் அவர் இந்​தப் பரிசை வென்​றுள்​ளார். இதுகுறித்து ராஜன் லால் கூறுகை​யில், “நான் கற்​பனை செய்து பார்க்​காத மிகச் சிறந்த பிறந்த நாள் பரிசு இது” என்​றார்.


பரிசுத் தொகையை எவ்​வாறு செலவிடு​வது என்​பது குறித்து அவர் முடிவு செய்​ய​வில்​லை. மாறாக வரவிருக்​கும் இந்​தியா - பாகிஸ்​தான் கிரிக்​கெட் போட்​டியைப் பார்க்க ஆவலுடன் காத்​திருக்​கிறார். பல வருட விடா​முயற்​சிக்​குப் பிறகு ராஜன் லாலுக்கு இந்த பரிசு கிடைத்​துள்​ளது.


“கடந்த 25 ஆண்​டு​களாக ஒவ்​வொரு ஆண்​டும் ஒரு டிக்​கெட் வாங்கி வரு​கிறேன். இது​வரை பரிசு வென்​ற​தில்​லை. திரைப்​படத் துறை நண்​பர்​களை சந்​திக்க மும்​பைக்கு பயணித்த போது இந்த டிக்​கெட்டை வாங்​கினேன். சவுதி அரேபி​யா​வில் இருந்த போது இந்த பரிசுத் தொகை குறித்து எனக்கு தெரிவிக்​கப்​பட்​டது. அந்த தருணம் நம்ப முடி​யாத​தாக இருந்​தது” என்​றார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%