தேங்காய்ப் பால்: ஆரோக்கியம் தரும் இயற்கை அமிர்தம்!

தேங்காய்ப் பால்: ஆரோக்கியம் தரும் இயற்கை அமிர்தம்!


 

உணவுக்கு ருசி சேர்ப்பது தேங்காய். தேங்காய்ப் பாலில் ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. அவற்றை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை இப்பதிவில் காண்போம்.


* ஆப்பம், இடியாப்பம் கொழுக்கட்டை போன்ற பதார்த்தங்களை தேங்காய்ப் பாலில் ஊற வைத்து சாப்பிட வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆறும்.


* தேங்காயை நன்றாக மென்று அந்தப் பாலை நீண்ட நேரம் வாயில் வைத்திருந்தால் வாய்ப்புண் ஆறும்.


* முகத்தில் எண்ணெய் பசை அதிகம் இருந்தால் தேங்காய் உடைத்த தண்ணீரில் பஞ்சை நனைத்து முகத்தை துடைத்து வந்தால் முகத்தில் உள்ள தூசுகள், எண்ணெய்ப் பசை ஆகியவை அறவே நீங்கிவிடும்.


* இளநீரில் சிறிது சந்தனம் சேர்த்து கழுத்தில் தடவி வந்தால் வேர்க்குரு நீங்கும். நல்ல இதமாகவும் இருக்கும்.


* சிறிதளவு சீரகத்துடன், தேங்காய் பால் ஊற்றி அரைத்து கொப்பளங்கள் மீது போட்டு வர இரண்டு நாட்களில் கொப்புளங்கள் ஆறும்.


* தேங்காய் பாலுடன் நெய் சேர்த்து பின் நாட்டுக்கோழி முட்டையுடன், வெந்தயக்கீரையையும் சேர்த்து சமையல் செய்து சாப்பிட்டால் ஒரே இடத்தில் அதிக நேரம் வேலை செய்பவர்கள் சோர்வோ மற்ற எந்த தொந்தரவும் இன்றி வேலை செய்ய முடியும்.


இதையும் படியுங்கள்:

கேசத்தின் அழகை அதிகரிக்கும் தேங்காய்ப் பால்....

* மஞ்சள், கருஞ்சீரகம் இவைகளை இடித்து பொடி செய்து தேங்காய்ப் பாலில் ஊற வைத்து அடுப்பில் காய்ச்ச எண்ணெய் பதம் வரும். வந்ததும் இறக்கி ஆற வைத்து சொறி, படைகளின் மீது தடவி வர குணம் ஆகும்.


* தேங்காயில் பால் எடுத்து அரை டம்ளர் அருந்தி வர தாது விருத்தி ஏற்படும்.


* ஞாபக மறதிக்கு ஒரு பத்தை தேங்காயும் நாலு பாதாம் பருப்பையும் 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். 



சைலண்ட் கில்லர்: 'பிரைடு ரைஸ் சிண்ட்ரோம்'

 

Fried Rice தெரியும். அது என்ன Fried Rice Syndrome என்றுதானே யோசிக்கிறீர்கள்? இது என்ன? இந்த Syndrome வந்தால் என்னாகும்? இது வர காரணம் என்ன? என அனைத்தையும் இந்தப் பதிவில் பார்ப்போம்.


Fried Rice Syndrome என்றால் என்ன?


கடையில் ஃபரைய்ட் ரைஸ் செய்வதைப் பார்த்திருக்கிறீர்களா? ஏற்கனவே பாதி வேக வைத்த அரிசியுடன் புதிதாக சேர்த்து செய்வார்கள். அதேபோல் வீட்டில் சிலர், மீதமுள்ள அரிசியை இரவு முழுவதும் வைத்துவிட்டு காலையில் சூடு செய்து சாப்பிடுவார்கள்.


இரவு முழுவதும் அறை வெப்பத்தில் அந்த சாதத்தில் பாக்டீரியாக்கள் வளரத் தொடங்கும். அந்த நிலையை தான் ஃபிரைய்ட் ரைஸ் சிண்ட்ரோம் என்கிறோம். அரிசியில் பேசிலஸ் செரியஸ் என்ற பாக்டீரியா உள்ளது, இது உணவை மாசுபடுத்தி நம்மை நோய்வாய்ப்படுத்தும். சுருக்கமாக சொல்லப்போனால், பழைய உணவு காரணமாக ஒருவரின் உடல்நிலை மோசமடையும் நிலைதான் Fried Rice Syndrome.


அறிகுறிகள் என்ன?


1. வயிற்று வலி


2. வயிற்றுப்போக்கு


3. வாந்தி மற்றும் குமட்டல்


4. காய்ச்சல்


5. கண் வலி


ஃபரைய்ட் ரைஸ் அல்லது பழய சாதம் (தண்ணீரில்லாத) ஆகியவற்றை சாப்பிட்ட பிறகு இந்த அறிகுறிகள் வந்தால், நீங்கள் Fried Rice Syndrome ஆல் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.


ஆதாரம்:


2008ம் ஆண்டில், 20 வயது இளைஞர் ஒருவர் பாஸ்தா சாப்பிட்டதால் உயிரிழந்ததாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பாஸ்தா சாதாரண வெப்பநிலையில் 5 நாட்களுக்கு அறையில் வைக்கப்பட்டது என்பது பிறகுதான் தெரிந்தது. ஃபிரைய்ட் ரைஸ் சிண்ட்ரோம் என்பதற்கு இது ஒரு உதாரணம்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%