news Breaking News
clock

தேசிய சீனியர் பெண்கள் கபடி போட்டி: 32 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் வென்ற தமிழக அணி

தேசிய சீனியர் பெண்கள் கபடி போட்டி: 32 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கம் வென்ற தமிழக அணி



மதுரை, ஜன.

- 72 ஆவது தேசிய சீனியர் பெண்கள் கபடி போட்டி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஜி.எம்.சி பாலயோகி உள்விளையாட்டு அரங்கில் 2026 ஜனவரி 27 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடை பெற்றது. இந்த போட்டியில் வேறு மாநில கபடி நடுவர்களின் பாரபட்சமான நடவ டிக்கைகளை எதிர்கொண்டு, வீராங்க னை கேப்டன் சினேகா தலைமை யிலான தமிழ்நாடு பெண்கள் அணி சிறப்பாக விளையாடி வெண்கலப் பதக்கத்தை வென்றது. தமிழ்நாடு அணி, உத்தரகண்ட், பீகார் அணிகளுடன் விளையாடி வெற்றிபெற்றது.பஞ்சாப் அணியிடம் தோல்வியைத் தழுவியது. முன் காலிறுதி ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை வென்றது. பரபரப்பான காலி றுதிப்போட்டியில் 39-37 புள்ளிகளில் சண்டிகர் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற தமிழ்நாடு அணி 32 ஆண்டுகளுக்குப் பிறகு சீனியர் போட்டியில் வெண்கலப்பதக்கத்தை உறுதிசெய்தது. அரையிறுதிப் போட்டியில் ரயில்வே அணியிடம் தோற்றது. இறுதிப்போட்டியில் ஹரியானா அணி 39–37 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய ரயில்வே அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஹரி யானா அணியின் நிகிதா இறு திப்போட்டியில் 17 புள்ளிகள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கியக் கார ணமாக அமைந்தார். நடப்பு சாம்பியனாக இருந்த இந்திய ரயில்வே அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. அரையிறுதி வரை முன்னேறிய தமிழ்நாடு மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய அணிகள் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றன. பல ஆண்டுகளுக்குப் பிறகு பதக் கத்தை வென்ற சீனியர் பெண்கள் அணி யினருக்கு தமிழக கபடி ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரு கின்றனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News