தேர்தல் ஆணைய அதிகாரியின் ஒருநாள் குடிநீர் செலவு 2400 ரூபாய்

தேர்தல் ஆணைய அதிகாரியின் ஒருநாள் குடிநீர் செலவு 2400 ரூபாய்

இந்திய தேர்தல் ஆணைய அலுவல கத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களுக்காக நாள்தோறும் குடிநீர் பாட்டில்களுக்கு செய்யும் செலவு தலையைச் சுற்ற வைத்துள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணை யர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணை யர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து, டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தங்கள் அலு வல் நேரங்களில் ‘ஆவா’(Aava) என்ற தனியார் கார்ப்பரேட் நிறுவனத்தின் குடிநீர் பாட்டில்களை மட்டுமே பயன் படுத்துகின்றனர். தேர்தல் ஆணையர்கள் கலந்துகொண்ட பல்வேறு அலுவலகக் கூட்டங்களில் இந்த குடிநீர் பாட்டில்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் இந்த ‘ஆவா’ நிறுவ னத்தின் இணையதளத்தில் 8 கால் லிட்டர் பாட்டில்களின் (250 மிலி) விலை 1,600 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி என்றால் ஒரு 250 மிலி குடிநீர் பாட்டிலின் விலை 200 ரூபாயாகும். நாள் ஒன்றுக்கு அலுவலக நேரத்தில் ஒரு அதி காரி குறைந்தது 3 லிட்டர் குடிநீர் பயன் படுத்தினால் கூட அதற்கு ஆகும் செலவு 2,400 ரூபாயாகும். அப்படி என்றால் ஒவ்வொரு அதிகா ரிக்கும் செய்யும் செலவுகள் தலையைச் சுற்ற வைக்கிறது. குறிப்பாக இந்தியா வில் ஒரு தொழிலாளி செய்யும் வேலை க்கு கொடுக்கப்படவேண்டிய அடிப்படை (குறைந்தபட்ச) ஊதியம் கூட கொடுக்கப் படாத போது மக்களின் நம்பிக்கையை இழந்த தேர்தல் அதிகாரிகளுக்காக குடி நீருக்கு மட்டுமே நாளொன்றுக்கு ஆயி ரக்கணக்கில் செலவழிப்பது மக்கள் மத்தியில், இணையத்தில் பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%