
ஹிமாச்சல் பிரதேசத்தில் புதன் ்கிழமை அதிகாலையில் அடு த்தடுத்து இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சம்பா மாவட்டத்தில் 3.3 ரிக்டர் அளவில் 20 கிலோ மீட்டர் ஆழத்தில் அதிகாலை 3 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு 4.39 மணியளவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் 4 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் உண ரப்பட்டதால், மக்கள் தற்காப்பு நடவ டிக்கையாக வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். ஏற்கெ னவே மேக வெடிப்பின் காரணமாக ஹிமாச்சலின் குலு மாவட்டத்தில் சாலை கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கிய பிறகு, ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் மட்டும் இயற்கைப் பேரிடர்களின் காரணமாக 276 பேர் பலியாகியுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த நிலநடுக்கம் மக்கள் மத்தியில் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?