தை பிறந்தால்...!

தை பிறந்தால்...!



இனி எல்லா வளமும்...

நலமும் கொண்டு

நாளும் தமிழ் தேசம்

தன்னிறைவு காணட்டும்!


என்றும் வந்தாரை...

வாழ வைக்கும்

தமிழர் நெஞ்சமெல்லாம்

வந்து வசந்தம் வீசட்டும்!


புத்துணர்ச்சியுடன்...

புதுப்பொலிவுடன்

முகமலர்ச்சியோடு

உறவுகள் கலக்கட்டும்!


முரட்டுக்காளையுடன்...

மல்லுக்கட்டும் இளைஞர்களின்

ஜல்லிக்கட்டு வீரம்

இப் புவியை ஆளட்டும்!


புது பானையில்...

மகிழ்வுடன் பொங்கிய

பொங்களின் வாசம்

காற்றில் மணக்கட்டும்!


நம் கனவுகள் யாவும்...

கதிரவன் ஒளிதனில்

பொன் எழில் கொண்டு

பிரகாசமாய் மலரட்டும்!


உழைத்து உழைத்து...

துரும்பாய் போனவர்

வாழ்வெல்லாம் யின்று முதல்

கரும்பாய் இணைக்கட்டும்!


நெஞ்சகத்தில் தனியே...

உருகும் உயிரெல்லாம்

பால் போல் வழிந்து அன்பாய்

ஒன்று கூடி வாழட்டும்!


தை பிறந்தால் வழி...

பிறக்கும் நன்னாளாம்

பொங்கல் திருநாளில்

புது விடியல் பிறக்கட்டும்!


கவிஞர்

ஜெ.ம.புதுயுகம்

பண்ணந்தூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%