" வெற்றிப் பனி
உருகி துள்ளித்
துள்ளி குதித்து
குதித்து அலை
அலையாய் ....."
நீரின் தவழ்ந்து
வரும் அழகும்
நீர்வீழ்ச்சியின்
அதித வேகமும் .... "
மலைப் பாறையில்
விழுந்து எழும்பும்
சுறுசுறுப்பும்
தெரிக்கும் நீர்
துளிகளும் ...."
நடை போட்டு
நடனமாடி பெண்
போல நாணம்
கொண்டு தலைகாட்டும்
நீரோடை ..."
நுரையை பொங்கி
நீர்க்குமிழி
வெடித்து பொங்கும்
புது வெள்ள
நீர் பாயும்
அழகே தனிதான் ..."
பெண் கூந்தல்
வீணைக் கம்பி
போல நெளிந்து
வளைந்து ஓடி
வரும் நீர் அழகு ......"
பாறையை வருடி
முட்டி மோதி
மணலாய்
மாற்றும் நீரின்
தனித் திறமை
அபாரமானது ...."
சரிந்து நெடு
தூரம் பாய்ந்து
வரும் நீரின்
பாய் விரிப்பு
நீர்பாய் ரம்மியம் ..."
இயற்கையின்
படைப்பும் அழகும்
சொல்லில் அடங்கா
சொக்க வாசல்
அன்றோ ......"
- சீர்காழி .ஆர். சீதாராமன் .
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?