நகைச்சுவைகள்

நகைச்சுவைகள்

என்னாங்க... புது தொடப்பம் வாங்கனும்...


பழசு எனாச்சி...?


பிஞ்சிடுச்சி...


சரி புதுசு வாங்கிடலாம்...


எப்ப....?


Big basket ல ஆர்டர் போட்டுடலாம் 


என்ன Big basketலயா...? நோ...


ஏன்...?


இதெல்லாம் நேர்ல பாத்து வாங்கனும் ஆன் லைன்ல வாங்குற சமாச்சாரம் இல்லை...


சரி கடைக்குப் போயே வாங்கிடலாம்...


தொடப்பம் எப்படி பாத்துவாங்கனும்னு தெரியுமா...?


சொல்லு கேட்டுக்கிறேன்...


நல்லா உயரமா இருக்கனும்...


ஓகே...


முத்துனதா இல்லாம இளசா இருக்கனும்


ஓகே...


 ப்ரஷ்ஷா இருக்கனும்...


ஓகே...


நல்லா கூட்டனும் 


ஓகே...


நல்லா பெருக்கனும்...


ஓகே...


அவ்ளோதான்...


அவ்ளோதானா.... நல்ல உயரமா,இளசா,புதுசா ஃப்ரஷசா, நல்லா கூட்டனும் பெருக்கனும் அவ்ளோதானே...


ஆமா....


எல்லாம் சரிதான் ஆனா கூப்படா அவங்க வருவாங்களான்னு தெரியலையே...


என்ன உளர்ரீங்க...


இல்ல நீ சொன்ன குவாலிபிகேஷன்லாம் நம்ம பொண்ணோட கணக்கு டீச்சருக்குத்தான் பொருந்துது அந்தம்மா நல்லா வேகமா கூட்டுது பெருக்குதுன்னு நம்ம பொண்ணே ஆச்சர்யப்பட்டிருக்கா அது சத்தியராஜ் அளவுக்கு இல்லன்னாக் கூட நல்ல உயரம் தான் இன்னும் கல்யாணமாகலன்னு நெனக்கிறேன் ஆனாலும் கூப்டா வருமான்னு தெரியல..


எடுறா அந்த பிஞ்ச தொடப்பக்கட்டைய...😈

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%