நடைபாதையில் ஸ்கூட்டர் ஓட்டிய நபருக்கு வழிவிடாத கேரள மூதாட்டிக்கு பாராட்டு

நடைபாதையில் ஸ்கூட்டர் ஓட்டிய நபருக்கு வழிவிடாத கேரள மூதாட்டிக்கு பாராட்டு


 

 

கோழிக்கோடு: கேரளா​வின் கோழிக்​கோடு பகு​தி​யைச் சேர்ந்தவர் பிர​பாவ​தி (73). இவர் சாலை​யோரம் உள்ள நடைபாதையில் சென்று கொண்​டிருந்​தார். இவருக்கு எதிரே ஒரு​வர் நடை​பாதை​யில் ஸ்கூட்​டர் ஓட்​டியபடி வந்தார். அவரை தடுத்து நிறுத்​தி​னார் பிர​பாவ​தி. அவர் தனது ஸ்கூட்​டரை ஓரமாக நிறுத்தி பிர​பாவதி செல்ல வழி​விட்​டார். ஆனால், அவர் செல்லவில்லை. ஸ்கூட்​டர் ஓட்டி வந்த நபரை தடுத்து நிறுத்​தி, அவருக்கு சாலை விதி​களை மதித்து சாலை​யில் செல்ல அறிவுறுத்தினார்.


இதனால் ஸ்கூட்​டர் ஓட்டி வந்த நபர் வேறு வழி​யின்றி திரும்​பி சாலை​யில் சென்​றார். இந்த வீடியோ வைரலானது. கோழிக்​கோடு மோட்​டார் வாக​னத்​துறை​யும், பிர​பாவதி செயலை பாராட்டி கவுரவித்​துள்​ளது.


இது குறித்து பிர​பாவதி கூறுகை​யில் ”எனது பெற்​றோர் கம்யூனிஸ்ட் கட்​சி​யினர். நானும் இளம் வயதில் கம்​யூனிஸ்ட் இயக்​கத்​தில் தீவிர​மாக பணி​யாற்​றினேன். பாரத சாரணர் இயக்கத்​தில் இருந்து மற்​றவர்​களுக்கு வழி​ காட்​டி​யுள்​ளேன். விடுதி​களி​லும் வார்​ட​னாக பணி​யாற்​றி​யுள்​ளேன். எனக்கு விதிமீறல் பிடிக்​காது. அதனால் ஸ்கூட்​டர் ஓட்டி வந்த நபரை, சாலை​யில் செல்​ல வற்​புறுத்​தினேன்​” என்​றார்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%