நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தால் 13 லட்சம் பேர் பலன்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
Dec 31 2025
103
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தால் 13 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர் என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்தோடுகூறியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சமூக வலைதளத்தில் அரசின் திட்டமான, ‘நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை பற்றி பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர், ‘நலம் காக்கும் ஸ்டாலின்' மிகச் சிறப்பான திட்டம். ஏராளமான மக்கள் பயன்பெறுகிறார்கள் என்பதை நான் பார்த்து மகிழ்ந்தேன்' என்று குறிப்பிட்டு இருந்தார்.
ப.சிதம்பரத்தின் இந்த பதிவை மேற்கோள் காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-–
உங்களைத் தேடி, உங்கள் பகுதிகளுக்கே வந்து உங்களின் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களின் மூலம் நேற்று வரை மட்டும் 13 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர்.
முழு உடல் பரிசோதனைகள், சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனைகள் போன்றவையால் தொடக்கநிலையிலேயே பல லட்சம் மக்களின் பிரச்சினைகள் கண்டறியப்பட்டு, உரிய உயர்தரச் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு அவர்களின் உயிர் காத்துள்ளோம். முகாம்களிலேயே முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைத்து மக்களின் துயர் துடைத்துள்ளோம். நலம் பெற்றவர்களின் குடும்பத்தினர் கூறும் நன்றிகளோடு தொடர்கிறது நலம் காக்கும் ஸ்டாலின்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?