news Breaking News
clock

நார்த்தங்காய் பச்சடி...

நார்த்தங்காய் பச்சடி...



நான்கு நார்த்தங்காய்களை விதை நீக்கிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். அதில் வரும் சாற்றினை அதனுடனேயே கலந்து வைத்துக்கொள்ளவும்.


அதோடு அதற்குத் தேவையான அளவு பொடி உப்பு, மஞ்சள் பொடி ஒரு ஸ்பூன், பெருங்காயத்தூள் ஒன்றரை ஸ்பூன் எல்லாம் கலந்து வைத்துக் கொள்ளவும்.


ஒரு பாணலியில் இரண்டு மேசைக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, குறுக்கு வாட்டில் பொடியாக நறுக்கிய எட்டு அல்லது பத்து பச்சை மிளகாயைப் போட்டு ஒருமுறை வதக்கி விட்டு பிறகு வைத்துள்ள நார்த்தங்காய் கலவையை கொட்டிக் கிளறவும்.


தண்ணீர் சேர்க்காமல், அடிப்பிடிக்காமல் அவ்வப்போது கிளறி மூடி வைக்கவும்.


ஒரு பாத்திரத்தில் முக்கால் கப் பொடி வெல்லத்தை அரை கப் நீரில் ஒரு கொதி விட்டு இறக்கி வடிகட்டி வைத்துக் கொள்ளவும். பாகு பதம் தேவையில்லை. பிசுக்கு வந்தால் போதும்.


நார்த்தங்காய் நன்கு வெந்தபின் வெல்லப்பாகையும் கொட்டிக் கிளறி இறக்கவும். சுவையான நார்த்தங்காய்ப் பச்சடி தயார்.


இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, அடை, பெசரட், பொங்கல், உப்புமா, தயிர்சாதம் அனைத்திற்கும் சூப்பரான ஒரு சைடு டிஷ் ஆகும். நீங்களும் செஞ்சு அசத்துங்க. நன்றி.


வி.பிரபாவதி

மடிப்பாக்கம்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News