நிதி மோசடி வழக்கில் சொத்துகளை மறைத்த தேவநாதன் ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைப்பு

நிதி மோசடி வழக்கில் சொத்துகளை மறைத்த  தேவநாதன் ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைப்பு

சென்னை, ஜூலை 25 -

மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட் நிதி நிறுவன நிதி மோசடி வழக்கில் ஜாமீன் கேட்டு தேவநாதன் மூன்றாவது முறையாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இதற்கு முன், இரண்டு முறை ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில், மூன்றாவது முறையாக தாக்கல் செய்த இம்மனு வில், தேவநாதன் மற்றும் அவருடன் தொடர் புடைய மற்றவர்களும் ஜாமீன் கோரியுள்ளனர். இந்த மனு மீதான விசாரணை வெள்ளிக் கிழமை (ஜூலை 25) உயர்நீதிமன்றத்தில் நடை பெற்றது. அப்போது, பாதிக்கப்பட்ட முதலீட்டா ளர்கள் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜ ரானார். அவர், தனது வாதத்தின்போது, “மனு தாரர்கள் (தேவநாதன்) தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ரூ.300 கோடிக்கான சொத்து ஆவ ணங்களை ஆய்வு செய்ததில், பல சொத்து களின் மதிப்பீடு தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. சொத்துக்களின் (நிலம்) அளவு மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளது. பாதியிலும் அதிகமான சொத்துக்கள் வில்லங்க சொத்துக்கள்” என்றும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பான முழு சொத்து விவரங்களின் உண்மையான பட்டியலை வருகிற வெள்ளிக்கிழமைக்குள் நீதி மன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, ஜாமீன் மனு மீதான வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%