பசிபிக் பெருங்கடலில் படகில் போதை பொருள் கடத்தல்; 2 பேரை சுட்டு வீழ்த்திய அமெரிக்க ராணுவம்
புளோரிடா,
அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு, போதை பொருள் கடத்தலை ஒழிக்கும் நடவடிக்கையில் தீவிரத்துடன் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க ராணுவம் வெளியிட்ட செய்தியில், போதை பொருள் கடத்தல் வழிகளை நன்கு அறிந்து, அதன் வழியே படகில் போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட 2 போதை பொருள் பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தி உள்ளோம்.
Also Read
டெல்லி: சமூக ஊடகங்களில் அவதூறு பேச்சு, ஆயுதங்களுடன் புகைப்படம்... 16 சிறுவர்கள் உள்பட 83 பேர் கைது
இதனை அமெரிக்க பாதுகாப்பு படையின் ஜெனரல் பிரான்சிஸ் எல். டோனோவான் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர். கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் இந்த போதை பொருள் கடத்தல் நடந்தது.
இதில், அமெரிக்க ராணுவத்தினருக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. படகை தாக்கி இதுதொடர்பான அழிக்கும் வீடியோ ஒன்றும் வெளியானது. அதனை அமெரிக்க பாதுகாப்பு துறை மந்திரி பீட் ஹெக்சேத்தும் பகிர்ந்து உள்ளார். அந்த படகில் போதை பொருட்கள் கடத்தப்பட்டன என கூறப்படுகிறது.
கரீபியன் கடல் பகுதியில் இதுபோன்ற அதிரடி நடவடிக்கையால், சில போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவர்கள் அனைத்து போதை பொருள் கடத்தல் நடவடிக்கையையும் காலவரையின்றி நிறுத்த முடிவு செய்துள்ளனர். இது அமெரிக்காவுக்கு கிடைத்த வெற்றி. அமெரிக்கர்களின் வாழ்வை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பாதுகாத்து உள்ளார் என ஹெக்சேத் தெரிவித்து உள்ளார்.
------------
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?