news Breaking News
clock

படைப்பாற்றலை வளர்க்க 15 மாவட்டங்களில் இயந்திரவியல் ஆய்வகங்கள்

படைப்பாற்றலை வளர்க்க 15 மாவட்டங்களில் இயந்திரவியல் ஆய்வகங்கள்



சென்னை: படைப்பாற்றலை வளர்க்க 15 மாவட்டங் களில் தலா ஒரு இயந்திரவியல் ஆய்வகங்கள் ரூ.6.09 கோடி யில் நிறுவப்பட்டு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாண வர்களிடம் பிரச்னைகளை தீர்க்கும் திறனை வளர்க்கவும், குழுவாக இணைந்து செயல்படக்கூடிய திறனைக் கற்றுக் கொள்ளவும், படைப்பாற்றலை வளர்க்கவும் 15 மாவட்டங்களில் தலா ஒரு இயந்திரவியல் ஆய்வகம் என்ற கணக்கில் 15 இயந்திரவியல் ஆய்வகங்கள் ரூ.6.09 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டு உள்ளன. இதற்கான பாடத்திட்டம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் அண்ணா பல்கலைக்கழ கத்தின் ஆதரவுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பாடத் திட்டத்தில் வகுப்பு ஒன்றுக்கு 11 வகையான உபகரணங்கள் வாயிலாக, 10 பரிசோதனைகள் உருவாக்கப்பட்டு 90 சத வீதம் செய்முறை கற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டுள்ளது. மேலும் இன்றைய நவீன உலகம் செயற்கை நுண்ண றிவு மற்றும் ரோபோட்டிக்ஸ் துறையை நோக்கி நகர்கிறது. இந்த வகுப்புகள் மாணவர்களுக்கு, எதிர்காலத்தில் பொறி யாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் களாக உருவெடுக்க தேவையான வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும். பள்ளிகள் அதனைச் சுற்றியுள்ள இதர பள்ளிகளுக்கு ஹப் பள்ளியாகச் செயல்பட்டு மற்ற பள்ளிகளின் மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்டு இறுதியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் வாயிலாகச் செய்முறை மற்றும் எழுத்துத் தேர்வுகள் மேற்கொள்ளப்பட்டு, மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்படும். எனவே, இந்த இயந்திரவியல் ஆய்வ கங்கள் வெறும் தொழில்நுட்ப பயிற்சி மட்டுமல்ல. இது மாண வர்களின் சிந்தனை முறையையே மாற்றக்கூடிய ஒரு முழுமையான கல்வித் திட்டமாகும். இது அரசுப்பள்ளி மாண வர்களை நாளைய உலகின் சவால்களை எதிர்கொள்ள தயார் செய்து, திறன்மிக்க படைப்பாளர்களாக மாற்றும் என்பதில் ஐயமில்லை” என கூறப்பட்டுள்ளது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News