பட்டாசு

பட்டாசு



சிவகாசி மக்களை வாழவைக்கும்

சிங்காரங்கள்

மருந்தை உள்வைத்து வெளி அழகுடன்


உலா வரும் ஓளி ஒலி தீபாவளியில்

இவை

திரியில் சிறு தீ பற்றவைக்க தீப் பொறிகளைச்


வண்ணங்களாய்

சிதற வைத்து கண்களுக்கு 

அழகான விருந்து படைத்து மகிழ்ச்சி தருமே


தரையில் சுற்றி மேல் நோக்கி 

ஓளியும் தந்திடும்

பற்றவைத்த நொடிகளிலே காதைக் கிழிக்கும்


ஒலியெழுப்பி ஊரைக்கூட்டும் உள்ளம் பூரிக்கும்

தெருவெங்கும் சரம் விரித்து திரி பிரித்து 


ஒரு பொறியில் புகை பரப்பி ஓசைகளுடன்

சிறுவர் முதல் பெரியவர் வரை மகிழ்ச்சி தருபவை


ஒரு நிமிடத்தில் கரியாகும் என்றாலும்

ஆவல் மிகுந்து வாங்கி வெடிக்கத் தூண்டும் 


சீனிவெடி ஓலை வெடி கேப்பு கம்பி

மத்தாப்பு

சங்கு சக்கரம் கொம்பு வானம் பாம்பு மாத்திரை


லக்ஷ்மி வெடி அணு குண்டு சரப் பட்டாசுகள்

சாட்டையும் ராக்கெட்டும் என்றெல்லாம் தவிர


எத்தனை எத்தனைப் பட்டாசு வகைகள்

தீபாவளியின் அடையாளமாய்

மகிழ்ச்சியின்


மறுபிம்பமாய் புத்துணர்வு தரும்

பட்டாசுகளாய்

பட்டி தொட்டி முதல் பட்டணத்திலும்


எல்லா வயதினருக்கும்

பரவசம் தரும்

எல்லையற்ற இன்பம் தரும்


வி.பிரபாவதி

மடிப்பாக்கம்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%