news Breaking News
clock

பண பையுடன் மஹா., அமைச்சர் 'வீடியோ' வெளியானதால் பரபரப்பு

பண பையுடன் மஹா., அமைச்சர் 'வீடியோ' வெளியானதால் பரபரப்பு

மும்பை:

வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய மறுநாள், மஹாராஷ்டிரா அமைச்சர் சஞ்சய் ஷிர்சாத், சிகரெட் புகைத்தபடி பணப் பையுடன் அமர்ந்திருப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.


துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தரப்பைச் சேர்ந்த சஞ்சய் ஷிர்சாத், மாநில சமூக நீதித் துறை அமைச்சராக பதவி வகிக்கிறார்.


அவுரங்காபாத் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வான இவர், 2024 சட்டசபை தேர்தலின் போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், 35 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.


கடந்த 2019 சட்டசபை தேர்தலில், 3.30 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக சஞ்சய் ஷிர்சாத் தெரிவித்த நிலையில், ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு சொத்துக்கள் அதிகரித்தது குறித்து விளக்கம் அளிக்கும்படி, சமீபத்தில் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.


இந்த விவகாரம் மாநில அரசியலில் புயலை கிளப்பிய நிலையில், அறையில் அமைச்சர் சஞ்சய் ஷிர்சாத் சிகரெட் புகைப்பதும், அருகில் பையில் பணம் கட்டுக்கட்டாக இருப்பது போன்றும், சமூக வலைதளத்தில் நேற்று வீடியோ வெளியானது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News