சிந்தையில் கொள்கையேற்று
சீரான செயல் தாங்கி
மாறாத பெரும் பயணம்
ஏற்றுக்கொண்ட கருத்தை மாற்றம் கொண்ட மனிதரிடம்
மனதேற்ற ஒரு பயணம்
காலாற நடந்து
கடல் கடந்து
தொடர் வண்டியில் தொடர்ந்து
வான்வெளிப் பறந்து
வழி ஏற்று
வாகாய்ப் பல பயணம்
பயண வழிப் பரப்புரை
பாதை பல காட்டும்
பாருக்குக் கருத்தைச் சேர்க்கும்
மொழியும் துணையாகி
வழி பல காட்டும்
ஆன்றோரின் அறிமுகமும்
சான்றோரின் அறவுரையும்
உற்ற துணையாகி
உலா வரும்
செல்லுமிடமெல்லாம்
சேர்க்கும் மக்கள் வெள்ளம்
பல்லோர் பணிந்தேத்த
பல்கிப் பெருகும்
துண்டுச் சீட்டில்
கண்டெடுத்த சொற்கள்
ஒலி வாங்கி தாங்கும்
ஒண்தமிழ்ச் சொற்கள்
பரப்புரைக்குத் துணையாகி
பாங்காகப் பவனி வரும்
பரப்புரையில் வகை பலவுண்டு
பதமாகக் குணநலம் கண்டு
குறைவறச் செய்தால்
குவலயத்தில் கொள்கை நிலைக்கும்.

தமிழ்நிலா
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?