பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு! கூட்டணியை முடிவு செய்ய அதிகாரம்!
Dec 31 2025
72
சேலம்: சேலத்தில் பாமக நிறுவனர் மற்றும் தலைவர் ராம தாஸ் தலைமையில் அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டம், திங்கட்கிழமை (டிச. 29) அன்று நடைபெற்றது. கட்சியில் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், கட்சி யாருக்குச் சொந்தம் என்ற இழுபறியும் தொடர்ந்து வந்தது. இந்நிலையில், பாமகவின் தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டு அதுகுறித்து, தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. அன்புமணியின் பதவிக்காலம் மே 29 ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டதாக தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் கூட்டணியை முடிவு செய்யவும் தேர்த லில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யவும் ராமதாஸூக்கு முழு அதிகாரம் வழங்கியும், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவ ராக இருந்த அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணியை, அந்த பொறுப்பில் இருந்து நீக்கியும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. பாமகவின் ஜி.கே. மணியை கட்சியில் இருந்து நீக்குவ தாக கூறிய அன்புமணிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கட்சியின் கவுரவத் தலைவராக ஜி.கே. மணி, பொதுச் செய லாளராக முரளி சங்கர், பொருளாளராக சையத் மன்சூர் உசேன் ஆகியோர் தேர்வு செய்யப்படுவதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?