பாரதம் கண்ட நம் பாரதி

பாரதம் கண்ட நம் பாரதி


முண்டாசுக் கவிஞனின்

கவியினில் கிளர்ந்தது

தீயா? 

தீப்பொறியா? ?


பயிலும் சிறுவரையும் குயிலையும் மயிலையும்

கும்மிப்பாட்டு இசைத்து...


தீர்த்தக் கரைதனில்

செண்பகத் தோட்டத்தில்


நல்லதோர் வீணை செய்து


வீணையடி நீ எனக்கு

மேவும் விரல் நானுக்கு

சொல்லடி சிவசக்தி! 


என்று


தீண்டும் இன்பம் தோன்றி

தீக்குள் விரல் வைத்து


காணுமிடந்தோறும் நின்ற

நந்தலாலவின் துணையோடு...


மோகத்தைக் கொன்று,

மூச்சை நிறுத்தும் வேதனையிலும்...


நான் வீழ்வேனென்று நினைத்தாயோ... !? 


என்று


நாவினில் 

வீறு சொல்லி


ஆண்டுகள் பல கடந்தும்

பாரதி! 


நீ

என்றென்றும்

எங்கள் மனங்களில் 


பசு மரத்தாணியாய்

விதைத்த தமிழ். 


"நான்

வாசிப்பதும்-

சுவாசிப்பதம்-

விசுவாசிப்பதும்...


உனையே தீஞ்சுனையே"


ப. வெங்கடகிருஷ்ணன்

திருவல்லிக்கேணி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%