எட்டயா புரத்தில்
ஏடெடுத்துப் படித்தவனே
பட்டுடுத்தி வாழ்ந்திடாமல்
பாட்டெழுதி விடுதலை
பெற்றிட உழைத்தவனே !!
தமிழ்மொழிச் சிறப்பைத்
தரணியெங்கும் பரப்பியவனே !!
உண்ண உணவு இல்லையென்றாலும்
உண்ண பறவைக்கு ஊட்டியவனே !!
வெள்ளையனை விரட்டிடவே
வேல்போல் பாட்டால் வீழ்த்தியவனே !!
சுப்பைய்யா தப்பையா என்றிடாமல்
சுதந்திரத்திற்கு உழைத்த பாடகனே !!
நெல்லை தந்த வீரத்திருமகனே
நித்தமும் நினைத்துப் போற்றுவோமே !!
சண்முக சுப்பிரமணியன்
திருநெல்வேலி.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%