🔥🔥
பாரதி!
உன் பெயரை
உச்சரிக்கும் போதெல்லாம்
உறங்கும் மனதில்
சூறாவளியின் சுழல்
மரபின் மாண்பை
முண்டாசில் சுமந்த
நின்னை நினைப்பதே
மனங்களுக்குப் பெருமை
கடலோசையின் நாதமாக
பொங்கி எழும்
புரட்சியில் எழுச்சிமிக்க
சிறகுகள் விரியும்
“சொல்லடி சிவசக்தி!”
என்ற சொல்லில்
சொட்டும் சொட்டாய்
பயம் வீழும்.
பாரதி!
எரிமலைக்குள் இறங்கிய நெருப்பாக
விண்ணை முட்டும் பேச்சில்
தலை நிமிரச் சொல்லியவன் நீ!
பசுமையைப் பரப்பும்
உன் பார்வை
தாழ்வைத் தகர்த்தும்
விடியல் கதிர்களாக
வானில் இருந்து
மனங்களுக்கு...
பாரதி!
காலத்தை எழுப்பிய
கவிஞனே...
நீயிருக்க...
தமிழ் அழியாத...
அக்னிச் சுடராய் ஒளிரும்.
நா.பத்மாவதி
கொரட்டூர்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%