news Breaking News
clock

பா.ஜ.க. சுற்றுப்பயண பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்

பா.ஜ.க. சுற்றுப்பயண பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்


சென்னை, ஜன. –


பா.ஜ.க. சுற்றுப்பயண பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


தமிழ்நாட்டில் சட்டசபைக்கு வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், இதுதொடர்பான அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட உள்ள நிலையில் தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் கட்சி நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனை, செயல்வீரர்கள் கூட்டம், நலத்திட்டங்கள் ஆலோசனை, கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரச்சாரம், பொதுக்கூட்டம் என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.


இந்த நிலையில், அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. இணைந்த தேசிய கூட்டணி சார்பில் கடந்த 23ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பிரச்சாரம் செய்தார்.


இந்த நிலையில் தமிழக பாஜக சார்பில் சட்டமன்ற தொகுதிகளுக்கு தொடர் சுற்றுப்பயணம் செல்ல உள்ள பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


ஒவ்வொரு பொறுப்பாளர்களுக்கும் குறைந்தது இரண்டு முதல் அதிகபட்சமாக ஏழு தொகுதிகள் வரை ஒதுக்கப்பட்டுள்ளது.


பொறுப்பாளர்கள் யார் யார்?


இதுதொடர்பாக தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:–


சிங்காநல்லூர், மதுரை தெற்கு, விருகம்பாக்கம், காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், பத்மநாபபுரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு பாஜக சுற்றுப்பயண பொறுப்பாளராக தமிழக முன்னாள் பாஜகத் தலைவர் அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


திருப்பரங்குன்றம், ராதாபுரம், வால்பாறை, திருப்பூர் வடக்கு, உதகமண்டலம் – மத்திய இணையமைச்சர் எல்.முருகன்


திருப்பூர் தெற்கு, குன்னூர், கோயம் புத்தூர் தெற்கு – வானசி சீனிவாசன்


கும்மிடிபூண்டி, மயிலாப்பூர், நாங்குநேரி, பொள்ளாச்சி, கிளியூர் – தமிழிசை சௌந்திரராஜன்


முதுகுளத்தூர், விளவன்கோடு, திருப்பதூர், சிவகங்கை, உடுமலைப் பேட்டை – எச்.ராஜா


எழும்பூர், ராசிபுரம், பரமத்தி வேலூர்– வி.பி. துரைசாமி


தென்காசி, பரமக்குடி, மேட்டுப் பாளையம், பழனி – பொன். ராதாகிருஷ்ணன்


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News