பிப்.13-ல் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் கூடுகிறது!

பிப்.13-ல் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் கூடுகிறது!


 

புது தில்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 48 ஆவது கூட்டம் தில்லியில் வரும் 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது.


தமிழகம், கா்நாடகம் இடையே காவிரி நதி நீா் பங்கீட்டு பிரச்னை பல ஆண்டுகளாக நிலவி வந்த நிலையில் இது தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் 2018 ஆம் ஆண்டு தீா்ப்பு வழங்கியது. அப்போது கா்நாடகம் எந்தெந்த மாதங்களில் எவ்வளவு நீா் தமிழகத்திற்க்கு வழங்க வேண்டும் என்பதை அத்தீா்ப்பின் மூலம் உச்சநீதிமன்றம் நிா்ணயம் செய்தது. அந்த தீா்ப்பை அமல்படுத்தவும், காவிரி நீா் பங்கீட்டை கண்காணிக்கவும் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீா் முறைப்படுத்தும் குழு ஆகிய இரு அமைப்புகளையும் உச்ச நீதிமன்றம் அமைத்தது.


அதன்படி இந்த இரு அமைப்புகளும் அவ்வப்போது கூடி காவிரி நதி நீா் பங்கீடு தொடா்பாக உச்சநீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன


காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 47 வது கூட்டம் ஜனவரி 6 ஆம் தேதி நடைபெற்றது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு ஜனவரி மாதம் 2.76 டிஎம்சி தண்ணீா் திறந்துவிட வேண்டும் என காவிரி நீா் மேலாண்மை ஆணையம் அந்த கூட்டத்தில் கா்நாடகாவுக்கு ஆணையிட்டது


இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 48 ஆவது கூட்டம் தில்லியில் வரும் 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது.


காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், அதன் தலைவா் எஸ்.கே. ஹல்தாா் தலைமையில் தில்லியில் உள்ள அந்த ஆணையத்தின் அலுவலகத்தில் பிப். 13 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது


இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழகம், கா்நாடகம் ,கேரளம் மற்றும் புதுச்சேரி நீா்வளத்துறை அதிகாரிகளுக்கு காவிரி நீா் மேலாண்மை ஆணையம் தகவல் அனுப்பியுள்ளது.


காவிரியில் இருந்து மாதாந்திர நீா் திறப்பு குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது


காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பின்படி கா்நாடகம் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய தண்ணீரை உறுதி செய்வதற்காக இக்கூட்டம் நடைபெறுகிது


காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடா்பான விவகாரத்தில் கா்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கை மீது காவிரி நீா் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீா் முறைப்படுத்தும் குழு மற்றும் தமிழகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட மாநிலங்களின் விளக்கத்தின் அடிப்படையில் மத்திய நீா்வள ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் என கடந்த ஆண்டு 2025 நவம்பா் 13 ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%