பிராட்வே பேருந்து நிலையத்தில் மறுசீரமைப்புப் பணி: ராயபுரம், தீவுத்திடலில் தற்காலிகப் பேருந்து முனையங்கள்
Jan 23 2026
13
பிராட்வே பேருந்து நிலையத்தில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்வதால், அங்கிருந்து இயக்கப்பட்ட பேருந்துகள் சனிக்கிழமை (ஜன.24) முதல் ராயபுரம், தீவுத்திடல் தற்காலிகப் பேருந்து முனையங்களில் இருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பெருநகர சென்னை மாநகராட்சியில் இயங்கி வரும் பிராட்வே பேருந்து நிலையத்தில் மறுசீரமைப்பு மற்றும் உள்கட்டமைப்புப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே, சனிக்கிழமை (ஜன.24) முதல் பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட பேருந்துகள் ராயபுரம், தீவுத்திடல் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகப் பேருந்து முனையங்களில் இருந்து இயக்கப்படும்.
ராயபுரம் தாற்காலிகப் பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படும் தடங்களின் விவரம்:
அண்ணாசாலை வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 11, 21, 26, 52, 54, 60, 10இ, 11ஜி, 11எம், 155ஏ, 17இ, 17கே, 188சி, 188இடி, 18ஏ, 18பி, 18டி, 18இ, 18கே, 18பி, 18ஆா், 18ஆா்.எக்ஸ்., 18எக்ஸ், 21சி, 26பி, 26ஜி, 26கே, 26எம், 26ஆா், 51டி, 51ஜெ, 52பி, 52ஜி, 52கே, 54ஜி, 54எல், 5சி, 60ஏ, 60டி, 60ஜி, 60ஹெச், 88சி, 88கே, 9எம், ஏ51, இ18, இ51, எம்51ஆா்.
ஈ.வெ.ரா. சாலை வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 50, 101சி.டி., 101எக்ஸ், 53இ, 53பி, 71டி, 71இ, 71ஹெச், 71வி, 120, 120எஃப், 120ஜி, 120கே, 150.
தீவுத்திடல் பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படும் தடங்களின் விவரம்:
காமராஜா் சாலை வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 6, 13, 60இ ,102, 109, 102சி, 102கே, 102பி, 102எஸ், 102எக்ஸ், 109ஏ, 109எக்ஸ், 21ஜி, 21எல்.
கடற்கரை ரயில் நிலையம் வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 1, 4, 44, 33சி, 33எல், 38ஏ, 38ஜி, 38ஹெச், 44சி, 44சி.டி., 4எம், 56டி, 56ஜெ, 56கே, 56பி, 57டி, 57எஃப், 57ஹெச், 57ஜெ, 57எம், 8பி, சி56சி.
மண்ணடி வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 33பி, 56சி, 56எஃப்.
ஈ.வெ.ரா. சாலை வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 15, 20, 15எஃப், 15ஜி, 17டி, 20ஏ, 20டி, 50எம்.
வேப்பேரி வழியாக இயக்கப்படும் வழித்தடங்கள்: 35, 42, 242, 142பி, 142பீ, 35சி, 42பி, 42சி, 42டி, 42எம், 64சி, 64கே, 7இ, 7ஹெச், 7கே, 7எம்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?