விருதுநகர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் 19 இடங்களில் திறப்பு

விருதுநகர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் 19 இடங்களில் திறப்பு



விருதுநகர், ஜன.- விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் வத்ராப், கான்சாபுரம், முஷ்டாக்குறிச்சி, இராமசாமியாபுரம், தம்பிப்பட்டி, தேவ தானம், சேத்தூர், மேட்டுப்பட்டி, சுந்தரபாண்டியம், முடுக் கன்குளம் மற்றும் சென்னிலைக்குடி ஆகிய 11 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வரு கின்றன. மேலும், தற்போது நெல் அறுவடைக்கு தயார் நிலை யில் உள்ள மேலூர் துரைச்சாமியாபுரம், அயன் கொல் லங்கொண்டான், ஜமீன் நல்லமங்களம், கோவிலூர், முகவூர், கம்மாப்பட்டி, கீழகாஞ்சிராங்குளம் மற்றும் ஏ. முக்குளம் ஆகிய 8 இடங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகம் (ஜி.ஆர்.ஏ) ரூ.2545, பொது ரகத்திற்கு ரூ.2500ம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். எனவே, விவசாயிகள், அறுவடை செய்த நெல்லினை நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயனடையலாம். மேலும் விபரங்களுக்கு 04562 252607 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்தள்ளது.  

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%