news Breaking News
clock

பிரேசில் முன்னாள் அதிபருக்கு வீட்டுக்காவல்

பிரேசில் முன்னாள் அதிபருக்கு வீட்டுக்காவல்

பிரேசிலா,


தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பிரேசில். இந்நாட்டின் முன்னாள் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ (வயது 70). இதனிடையே, கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பொல்சனாரோ தோல்வியடைந்தார். பிரேசில் அதிபராக லூயிஸ் இன்சியோலுலா டா சில்வா தேர்ந்தெடுக்கப்பட்டார்.


அதேவேளை, தேர்தலில் தோல்வியடைந்தபோதும் அதிபர் பதவியில் இருந்து விலக பொல்சனாரோ மறுத்தார். மேலும், தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக தனது ஆதரவாளர்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால், இறுதியில் புதிய அதிபராக சில்வா பதவியேற்றார்.


இதனிடையே, தேர்தல் தோல்வியை ஏற்கமறுத்தல், தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சி, புதிய ஆட்சியை கவிழ்க்க சதி உள்பட பொல்சனாரோ மீது பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், பொல்சனாரோ மீதான வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. அதில், பொல்சனாரோவை வீட்டுக்காவலில் வைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பிரேசிலாவில் உள்ள பொல்சனாரோவின் வீட்டிற்கு சென்ற பாதுகாப்புப்படையினர் அவரை வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். மேலும், பொல்சனாரோவின் செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News