சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட நான்கு மாநகராட்சிகள் மற்றும் 10 நகராட்சிகளுக்கான கவுன் சிலர்கள் எண்ணிக்கையை நிர்ணயித்து தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதன்படி திருவண்ணாமலை, நாமக்கல், புதுக் கோட்டை, காரைக்குடி ஆகிய மாநகராட்சிகளில் தலா 48 கவுன்சிலர்கள் இடம்பெறுவார்கள். மாமல்லபுரம், ஸ்ரீபெரும் புதூர், திருவையாறு, போளூர், செங்கம், கன்னியாகுமரி, கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை மற்றும் சங்ககிரி ஆகிய 10 நகராட்சிகளில் தலா 22 கவுன்சிலர்கள் இடம்பெறு வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நகர்ப்புற விரிவாக்கம் காரணமாக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?