இம்பால்,
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பைரேன்சிங் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வந்தது. கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம், ‘குகி’ பழங்குடியினர் நடத்திய பேரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், அவர்களுக்கும், ‘மெய்தி’ இனத்தினருக்கும் இடையே கலவரம் வெடித்தது. கலவரத்தில் 260-க்கு மேற்பட்டோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.
தொடர்ந்து இரு இனங்களை சேர்ந்த ஆயுதக்குழுக்கள் இடையே சண்டை நடந்து வருகிறது. இதற்கிடையே, வன்முறை நீடித்ததால், கடந்த ஆண்டு பிப்ரவரி 9-ந்தேதி, பைரேன் சிங் தலைமையிலான அரசு பதவி விலகியது. பிப்ரவரி 13-ந்தேதி, அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
சட்டசபை முடக்கி வைக்கப்பட்டது. 6 மாதங்களுக்கு பிறகு ஜனாதிபதி ஆட்சி நீட்டிக்கப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மீண்டும் அமைக்கும் நோக்கத்தில், மெய்தி, குகி இனங்களை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சிகள், சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரிடம் பா.ஜ.க. மேலிடம் கருத்து கேட்டது. கடந்த மாதம் 14-ந்தேதி, இருதரப்பு எம்.எல்.ஏ.க்களிடம் பா.ஜ.க. பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் கருத்து கேட்டார்.
டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் மணிப்பூர் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று நடந்தது. அதில், சட்டசபை பா.ஜ.க. கட்சி தலைவராக (முதல்-மந்திரி) ஒய்.கெம்சந்த் சிங் தேர்வு செய்யப்பட்டார். ‘குகி’ பழங்குடி இனத்தை சேர்ந்த முன்னாள் பெண் மந்திரி நெம்சா கிப்ஜென், துணை முதல்-மந்திரியாக தேர்வாகி உள்ளார்.
இதையடுத்து, மணிப்பூரில் மீண்டும் ஆட்சி அமைக்க ஏதுவாக அங்கு அமலில் இருந்த ஜனாதிபதி ஆட்சி வாபஸ் பெறப்பட்டது. மணிப்பூரில் புதிய அரசு வரும் 12-ந்தேதிக்குள், பதவியேற்கும் என்று தெரிகிறது.
இந்த நிலையில், மணிப்பூரில் இன்று மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளது. குக்கி இனத்தவர் அதிகம் வசிக்கும் பகுதிக்கு சுயாட்சி கேட்டு நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு கலவரமாக மாறியது.
புதிய முதல்-மந்திரி பதவியேற்ற மறுநாளே மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டுள்ளது. கலவலரக்காரர்கள் பொது சொத்துகளுக்கு தீ வைத்தனர். அமைதியை நிலைநாட்ட காவல்துறை, துணை ராணுவ படைகள் முயன்று வருகின்றன.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?