news Breaking News
clock

புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 85,531வாக்காளர்கள் நீக்கம்

புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 85,531வாக்காளர்கள் நீக்கம்



 

புதுச்சேரி,


புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் குலோத்துங்கன் இன்று வெளியிட்டார். அதில் எஸ்.ஐ.ஆர். பணிக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் இருந்து 10.05 சதவீதம் என 85,531 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் 14,151 பேர், முகவரியில் இல்லாதவர்கள் 22,776 பேர், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் 45,312 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.


வரைவு வாக்காளர் பட்டியலில், மொத்தம் 8.51 லட்சம் வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது 7.64 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருந்தால் வரும் ஜனவரி 15-ம் தேதி வரை பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.


வரைவுப் பட்டியலில் பெயர் விடுபட்ட, வேறு பகுதிக்கு குடிபெயர்ந்த, இறந்த மற்றும் போலி வாக்காளர்கள் குறித்த தகவல்களும் வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி, மாஹே, யேனா பகுதிகளில் தீவிர சிறப்பு வாக்காளர் திருத்தம் நிறைவையொட்டி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News