பெங்களூருவில் ரூ.21.5 கோடி போதைப் பொருட்கள் பறிமுதல்: 3 வெளிநாட்டினர் உட்பட 15 பேர் கைது
பெங்களூரு: பெங்களூரு மாநகர காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருடன் இணைந்து அம்ருதஹள்ளி, ஹெப்பகுடி,ஜே.பி.நகர், கே.ஜி.ஹள்ளி உள்ளிட்ட இடங்களில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதில் 9.46 கிலோ ஹைட்ரோ கஞ்சா, 34 கிலோ கஞ்சா, 5.67 கிலோ எம்டிஎம்ஏ, 131 கிராம் கோகைன், 29 எல்எஸ்டி மாத்திரைகள், 27 கிராம் எல்எஸ்டி கட்டிகள், 462 மில்லி ஹாஷிஷ் எண்ணெய் உள்ளிட்ட போதைப் பொருட்கள் சிக்கின.
கடத்தல்காரர்களிடம் இருந்து 2 கார், 3 இரு சக்கர வாகனம், 6 செல்போன்கள், ரூ.24 ஆயிரத்து 500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தலில் ஈடுபட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் 3 பேர் வெளிநாட்டினர். 15 பேர் மீதும் போதைப் பொருள் தடுப்பு சட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் சந்தை மதிப்பு ரூ.21.5 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், கல்லூரி மாணவர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு விற்பனை செய்வதற்காக வெளிநாட்டில் இருந்து இவற்றை வாங்கியது தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?