பெரியகுளம் அருகே கஞ்சா கடத்திய பெண் கைது 25 கிலோ பறிமுதல்

பெரியகுளம் அருகே கஞ்சா கடத்திய பெண் கைது 25 கிலோ பறிமுதல்



தேனி,பிப்.

பெரியகுளம் அருகே மதுவிலக்கு காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் ஆந்திராவில் இருந்து தேனி மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி வந்த பெண்ணை கைது செய்து, 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த னர். பெரியகுளம் அருகே திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள எ.புதுப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த மது விலக்கு காவல்துறையினர் சந்தேகத்திற்கு இணங்க பெண்ணை சோதனை செய்தனர். அப்போது அவரிடமிருந்து அரசால் தடை செய்யப் பட்ட 24.590 கிலோ எடையுள்ள கஞ்சா பண்டல் பண்டலாக இருப்பது கண்டறிந்து கைப்பற்றப்பட்டது. இதையடுத்து அப்பெண்ணை கைது செய்த தேனி மதுவிலக்கு போலீ சார் அவரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த முருகேஸ்வரி (53) என்பதும், இவர் ஆந்திர மாநி லம் சென்று அங்கு கேரளாவைச் சேர்ந்த குன்னிப்பா என்ப வரிடம் ரூ40 ஆயிரத்திற்கு 25 கிலோ கஞ்சா வாங்கியது தெரியவந்தது. மேலும் அவற்றை தேனி மாவட்டத்தில் சில்லறை விற்பனை செய்வதற்காக ஆந்திராவில் இருந்து கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக முருகேஸ்வரி, குன்னிப்பா என இரு வர் மீதும் வழக்குப் பதிந்த தேனி மதுவிலக்கு போலீசார், முருகேஸ்வரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேலும் கஞ்சா சப்ளை செய்த குன்னிப்பாவை தீவிரமாக தேடி வருகின்றனர். கம்பம் மெட்டு சோதனைச்சாவடியில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி திடீர் ஆய்வு தேனி, பிப்.7- தமிழ்நாடு -கேரளா எல்லையான கம்பம் மெட்டு சோத னைச் சாவடியில் திண்டுக்கல் சரக காவல்துறை தலைவர் சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார். தேனி மாவட்டத்தில் தமிழகத்தையும் கேரளாவையும் இணைக்கும் பகுதியாக போடிமெட்டு, குமுளி, கம்பம் மெட்டு இருந்து வருகிறது. இங்கு தமிழகம் மற்றும் கேரள காவல், வனத்துறை சோதனை சாவடி உள்ளது. இங்கு கஞ்சா, ரேசன் அரிசி கடத்தல் ,கனிமவளங்கள் , கேரளா வில் இருந்து தமிழகத்திற்கு இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள் கொண்டு செல்லப்படுகிறதா? என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி சாமிநாதன்,தேனி மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் சினேஹா பிரியா ஆகியோர் கம்பம்மெட்டில் உள்ள தமிழக காவல் மற்றும் வனத்துறை சோதனைச் சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழக கேரள எல்லைப் பாதுகாப்பு சம்பந்தமாக இரு மாநில போலீஸ் அதிகாரி கள் ஆலோசனை கூட்டம் கேரள மாநிலம் தேக்கடியில் ராஜீவ் காந்தி அரங்கத்தில் நடைபெற்றது.இதனை தொட ர்ந்து குமுளி, கம்பம் மெட்டில் உள்ள போலீஸ் மற்றும் வனத்துறை சோதனை சாவடிகளில் அடிப்படை வசதி கள், சிசிசிடி கேமிரா , வருகை பதிவேட்டை ஆய்வு செய்த தாக தெரிவித்தனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%