இன்றைய தாத்தா பாட்டிக்கு பேரக்குழந்தைகளின் மேல் உள்ள உரிமை பற்றிய கேள்விகுறியே..
இன்றைய தாத்தா பாட்டிக்கு பேரக்குழந்தைகளை கண்டிக்க உரிமை இருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும் .பிள்ளைகளை கண்டித்து வளர்ப்பது போல பேரப்பிள்ளைகளை கண்டித்து வளர்க்க எந்த தாத்தா ஆச்சிக்கும் மனசு வராது..என்பது ஒரு புறம் இருக்க அதற்கான உரிமை இருக்கிறதா என்ற கேள்வியும் கூடவே வருகிறது.
அந்தக் காலத்தில் கூட்டுக்குடும்ப முறையில் தாத்தாவும் ஆச்சியும் எல்லாவித முடிவையும் சுதந்திரமாக எடுத்தார்கள்.அதற்கு பிள்ளைகள் மட்டுமல்ல பேரப்பிள்ளைகளும் கட்டுப்பட்டார்கள். இப்போது தனித்தனி குடும்பமான நிலையில் பிள்ளைகளே பெற்றோர் பேச்சை கேட்பது அரிது என்ற நிலை வந்து விட்ட பிறகு பேரப் பிள்ளைகளுக்கு தாத்தா ஆச்சி அறிவுரை கூறுவதை கேட்கும் மனநிலை எப்படி வரும்.
குடும்பத்தில் இருக்கும் வயதானவர்கள் அந்த குடும்பத்திற்கே ஒரு பொக்கிஷமாய் அனுபவப் பெட்டகங்களாய் திகழ்பவர்கள். அப்படிப்பட்டவர்கள் கூறும் அறிவுரைகள் குடும்பம் நல்லபடியாக வழிநடக்க மிகவும் பெரிய அளவில் உதவும்.
இப்போதுள்ள காலத்தில் தாத்தா ஆச்சி- பேரக்குழந்தைகள் உறவு விளையாட்டான மேம்போக்காக ஒரு விஷயமாகவே இருக்கிறதே ஒழிய.. தன்னுடைய அனுபவ அறிவால் தவறு என்று தெரியும் ஒரு விஷயத்தை கூட சொல்லும் உரிமை பெரியவர்களுக்கு இப்போதெல்லாம் இருப்பதில்லை ...முக்கியமாக பேரக்குழந்தைகள் விஷயத்தில்.அப்படி பெரியவர்கள் அறிவுரை கூறும் பட்சத்தில் அதை பிள்ளைகள் விரும்புவதில்லை. தங்கள் குழந்தையின் கண்டிக்கும் உரிமையை தங்கள் பெற்றோருக்கு நிறைய பிள்ளைகள் தருவதில்லை..இதுதான் கசப்பான உண்மை
மாறிவிட்ட காலமும் ..இப்போதுள்ள டெக்னாலஜியும் ..புதிது புதிதாய் வரும் மாற்றங்களும் ..எல்லாவற்றுக்கும் மேலாக மாறிவிட்ட மனநிலைகளும் ..என எல்லாமும் ஆக சேர்ந்து பெரியவர்களின் அந்த உரிமையை தட்டிப் பறித்து விடுகின்றன...
ஆனால் ஒன்று ஒத்துக் கொள்ள வேண்டும் இப்போது உள்ள குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோருக்கு சவால் அதிகம் ...தாத்தா பாட்டியால் அவர்கள் எல்லா பிரச்சனையிலும் தலையிட்டு சரி பண்ண முடியாது ..அப்படி வரும்போது நம்மால் கையாள முடியாத பதின்பருவ பேரப்பிள்ளைகளை பெற்றோர் பொறுப்பில் விடுவது தான் சரி ...
பிரச்சனை எல்லாம் விடுவோம் தாத்தா பாட்டி- பேரக்குழந்தைகள் உறவு என்பது இளம் சாரல் மாதிரி ஒரு அருமையான முழுமையான மனதிற்கு இதமான ஒன்று.

தி.வள்ளி
திருநெல்வேலி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?