சரவணன் நொந்துபோய் தன் மனைவி சாவித்திரியின் கையைப் பிடித்தபடி ரோடில் நடந்தார். முதுமை யும் உடல் சோர்வும் இருவரையும் வாட்டியெடுத்தன ! வீட்டை தன் பெய ருக்கு எழுதி வாங்கிக்கொண்டான் மகன் மகேஷ்.
பெண்டாட்டியின் பேச்சைக் கேட்டு கொஞ்சம் கொஞ்சமாக தன் பெற்றோரை உதாசீனம் செய்ய ஆரம்பித்தான். ஏற்கனவே இருவர் உடலிலும் சர்க்கரை மற்றும் இரத்தக் கொதிப்பு நோய் வாட்டியெ டுத்தன. வயதான காலத்தில் பைய னும் மருமகளும் ஆதரவாய்இருப்பா ர்கள் என்ற நம்பிக்கையில் மண்விழு ந்தது. கடைசியில் மனம் வெறு த்துப் போய் வீட்டை விட்டே வெளியே றினர்.
" நாம இப்போ எங்கே போறோம் ? "
கேட்டுவிட்டு பெருமூச்சொன்றை விட்
டாள் சாவித்திரி.
" இவ்வளவு பெரிய உலகத்தில் நமக்குஇடம் கிடைக்காமலா போகும் !" பதிலுக்கு பெருமூச்சு விட்டார் சரவ ணன்.
" ஆனாலும் நீங்க அவசரப்பட்டு இப்படி வீட்டை விட்டு வெளியேறும் முடிவை எடுத்திருக்க வேண்டிய தில்லை..."
" எது...வீட்டுல இருக்கறதும் இல்லாததும் உங்கள் செளகர்யம்னு நாக்கில நரம்பில்லாம சொன் னானே..பாவிப்பய..அப்படிசொன்ன பிறகு எப்படி அந்த வீட்டில நாம
இருக்க முடியும் ! " குரலில் வேதனை
இழைந்தோடியது !
அப்போது டூ வீலரில் எதிரில் வந்த கோபுசட்டென பிரேக் போட்டு நிறுத்தி, வண்டியிலிருந்து கீழே இறங்கினான்.
" சார், வணக்கம். என்னைத் தெரியு தாசார்...நான்தான் கோபு ! "
கண்ணாடியை தன் இடது கையால் சரி செய்தபடி அவனை ஏறெடுத்துப் பார்த்தார். வயதாகிப் போனதால் சரவணனுக்கு சட்டென நியாபகம் வரவில்லை.
" நீங்க யார்னு தெரியல்லயே தம்பி !"
" சார் ! நான் கோகுலம் முதியோர் இல்
லத்தின் காப்பாளர். இல்லம் விருத்தி
செய்ய ஃபைனான்ஸ் தேவைன்னு விளம்பரம் செய்திருந்தோம். மறு நாளே நீங்கள் வந்து ஐந்து லட்ச ரூபாய்க்கு செக் கொடுத்தீங்க. இவ்வ ளவு பெரிய தொகை கொடுத்த உங்களை மறக்க முடியுமா சார் ! அதிருக்கட்டும் நீங்களும் அம்மா
வும் தன்னந்தனியா எங்கே புறப்பட்டீ
ங்க கையில் மூட்டை முடிச்சோடு? "
சரவணனும் சாவித்திரியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண் டனர்.
தாங்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்
பட்டுவிட்டோம். தங்க இடம் இல்லை.
வயதான காலத்தில் அரவணைக்கும்
எண்ணம் இல்லாமல் எங்களை எங் கள் மகன் வீட்டை விட்டே துரத்திவிட் டான் என சொல்லி கோகுலம் முதி யோர் இல்லத்தில் சுலபமாக சேர்ந்து விடலாம். தாங்கள் கொடுத்த டொனே ஷன் ஐந்து லட்சத்தைச் சுட்டிக்காட்டி விஷயத்தை முடித்துவிடலாம். ஆனால்............
" என்ன சார் யோசனை ? அதுக்குள்ள என்னை மறந்துட்டீங்களா ? "என்றான் கோபு.
" ஆமாம் தம்பி ! வயசாகிப் போனதால
நியாபக மறதி ஜாஸ்தியாயிடிச்சு. எப்படி இருக்கீங்க தம்பி ?"
" உங்களை மாதிரி பெரியவங்க ஆசிர்வாதத்தால நல்லா இருக்கேன் சார், அது சரி, வெளியூர் பயணமா.? " புன் சிரிப்புடன் கேட்டான் கோபு.
" ஆமாம்பா, வெளியூர்ல இருக்
குற ஒரு உறவினர் வீட்டுக்குப் போய்
கொஞ்ச நாள் தங்கிட்டு வரலாம்னு
கிளம்பிட்டோம்பா!"
" ஜாக்கிரதையாப் போயிட்டு வாங்க சார் ! அப்போ நான் கிளம்புறேன்
அம்மா வரேன்மா.! " இருவரையும் வணங்கிவிட்டுக்கிளம்பினான் கோபு.
" சாவித்திரி, நிர்க்கதியா நிற்கும்
நம்மளை கோகுலம் இல்லத்தில் சே
ர்த்துக்கச் சொல்லி கோபுவிடம் கேட்
டிருக்கலாம்னு உம் மனசில தோ
ணுதா?"
" இல்லீங்க, தானம் கொடுத்ததை
சுட்டிக் காட்டி நீங்க எந்த ஆதாயமும்
எதிர்பார்க்க மாட்டீங்கன்னு எனக்
குத் தெரியும். நான் உங்கள் பெண்
டாட்டி. நானும் அப்படித்தான்...."
மனைவியை நினைத்து பெருமை
யுற்றார் சரவணன்.
அதே சமயம், " ஹும்! யாரோ ஒரு மூணாவது மனுஷனுக்கு இருக்கற அன்பு கூட நம் பிள்ளைக்கு இல்லாம போயிடிச்சே!" அதை நினைச்சால்
தான் வேதனையா இருக்கு ." விசன த்துடன் ஒலித்தது சரவணனின்
குரல்.
' நாம பெத்ததுன்னா இருக்கும். தத்தே
டுத்து வளர்த்த பிள்ளைக்கு எப்படி
நம் மீது பாசம் இருக்கும் ?' வேதனை
யுடன் நினைத்துக்கொண்டாள் சாவி
த்திரி.
மீண்டும் இருவ ரும் கை கோர்த்தபடி தங்களின் இலக்கில்லாத நடைப் பயணத்தை தொட ர்ந்தனர் அந்த வயதான தம்பதியர் !
..................................
வி.கே.லக்ஷ்மிநாராயணன்