புதுதில்லி: தில்லி குண்டுவெடிப்புக்குப் பிறகு, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அளித்த புகாரின் பேரில், மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பான இரண்டு தனித்தனி முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில், அல் ஃபலாஹ் பல்கலைக்கழகத்தின் தலைவரான ஜாவத் அகமது சித்திக்கியை தில்லி காவல்துறை குற்றப்பிரிவு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் அமலாக்க இயக்குநரகம் நடவடிக்கைகளைத் தொடங்கியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்புக்குப் பிறகு, ஹரியாணாவின் ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள அல் ஃபலாஹ் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் தொடர்பான முறைகேடுகள் மற்றும் போலி ஆவணங்கள் குறித்து குற்றப்பிரிவு போலீஸார் வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் தலைவர் ஜாவத் அகமது சித்திக் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம் அவரை நான்கு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க குற்றப்பிரிவு குற்றப்பிரிவு போலீஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். சித்திக்கின் ரூ.140 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
நவம்பா் 10 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீா், ஹரியாணா மற்றும் உத்தரபிரதேசம் முழுவதும் பரவியிருந்த ‘வெள்ளை காலா் பயங்கரவாத குழுவை‘ போலீஸாா் முறியடித்தனா். 2,900 கிலோகிராம் வெடிபொருட்களை பறிமுதல் செய்ப்பட்டது. மேலும் மூன்று மருத்துவா்கள் உள்பட 8 பேரை கைது செய்யப்பட்டனா். இவை நடந்து சில மணி நேரங்களுக்குப் பிறகு, தில்லியின் செங்கோட்டை மெட்ரோ நிலையத்திற்கு அருகே மெதுவாக நகரும் காா் மீது அதிக தீவிரம் கொண்ட வெடிப்பு ஏற்பட்டது, இதில் 13 போ் உயிரிழந்தனா் மற்றும் பலா் காயமடைந்தனா்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?