மதுரையில் புத்தகத் திருவிழா இவ்வாண்டும் உற்சாகமாகத் தொடங்கியுள்ளது. இருநூறுக்கும் மேற்பட்ட அரங்குகளில் புத்தகங்கள் வாசகர்களை மகிழ்வித்து வருகிறது. இதில் அரங்கு எண் 110 பன்மைவெளியில் இளமனூர் பள்ளியின் தமிழாசிரியர் 'நல்லாசிரியர்' மு.மகேந்திர பாபு எழுதிய 'மகள் வரைந்த கோடுகள், பால்யம் என்றொரு பருவம், வெற்றிக் கதவின் திறவுகோல், பூந்தோட்டம் நூல்கள் இங்கு கிடைக்கும். மேலும் யாப்பு வெளியீட்டில் பண்பாட்டு ஆய்வாளர் 'ஏர்' மகாராசனின் நூல்களும், எழுத்தாளர் அய்யனார் ஈடாடியின் நூல்களும், ஏர் இதழும் கிடைக்கும். நண்பர்கள் வாங்கிப் பயன்பெறலாம். பன்மை வெளி அரங்கில் நல்லாசிரியர் மகேந்திர பாபு எழுதிய நூல்களை சொக்கம்பட்டிப் பள்ளியின் தமிழாசிரியர் சுப்பிரமணியன் மற்றும் ஆண்டார் கொட்டாரம் பள்ளியின் தமிழாசிரியர் சுப்ரமணி ஆகியோர் ஆனந்தன் அவர்களிடம் நூல்களைப் பெற்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?