வந்தவாசி, ஜன 23:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சார்பில் பொது மக்களுக்கு கண்ணுக்கு கலிங்கம் சொட்டு மருந்து விடும் நிகழ்வு நடைபெற்றது. அறக்கட்டளை செயலாளர் சம்பத் தலைமையில், பொறுப்பாசிரியர் அன்பழகன் முன்னிலை வகிக்க, நிகழ்வில் சமூக ஆர்வலர் கேப்டன் மு.பிரபாகரன் மன்னிப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். மேலும் வீரம்பாக்கம் அரசு சித்த மருத்துவமனை டாக்டர் வேலாயுதம் தலைமையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
பா. சீனிவாசன், வந்தவாசி.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%