தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பென்னாகரம் கிளை கூட்டம் மாவட்டத் தலைவர் கூத்தப்பாடி மா. பழனி தலைமையில் நடைபெற்றது. பென்னாகரம் கிளையின் புதிய பொறுப்பாளர்களாக தலைவராக சு. பழனி ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர், செயலாளராக வைகுந்தம், பொருளாளராக மதிவாணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
கூட்டத்தில் அறிவியல் கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது,
அறிவியல் சிந்தனையும் அறிவியல் பார்வையும் அனைவரிடமும் ஏற்படுத்துவது,
அறிவியல் இயக்க கிளைகள் அனைத்து பகுதிகளிலும் உருவாக்க முயற்சி மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் வானவில் மன்ற கருத்தாளர்கள் கலந்து கொண்டார்கள்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?