
சென்னை:
தமிழ்நாட்டில் 2025-26 ஆம் கல்வி யாண்டுக்கான மருத்துவப் படிப்பு கல்விக் கட்டணம் உயர்ந்து உள்ளது. மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்களுக்கான எம்பிபிஎஸ் கல்விக் கட்டணம் ரூ.13.5 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்ச மாக உயர்ந்துள்ளது. 21 சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.4.34 லட்சம் முதல் ரூ.4.5 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பதில் மாற்ற மில்லை. வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டில் ரூ.24.5 லட்ச மாக இருந்த மருத்துவ கல்விக் கட்டணம் ரூ.27 லட்சமாக உயர்ந்துள்ளது. என்.ஆர்.ஐ. கைவிடப்பட்ட ஒதுக்கீடு நீக்கப் பட்டுள்ளதால், இந்த வகையில் காலியாகும் இடங்கள் மேலாண்மை ஒதுக்கீட்டிற்கு மாற்றப்படும். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கட்டணம் ரூ.5.40 லட்சம், நிர்வாக ஒதுக்கீடு கட்டணம் ரூ.16.20 லட்சம், வெளிநாடு வாழ் மாணவர் களுக்கு ஒதுக்கீட்டு கட்டணம் ரூ.29.4 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?