மாணவி பாலியல் தொல்லை வழக்கில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தலைமறைவு
Oct 29 2025
17
மாணவி பாலியல் தொல்லை வழக்கில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தலைமறைவாகியுள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கொண்டோட்டி பகுதியை சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக். இவர், கொண்டோட்டி பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். அவர், பள்ளியில் பணியாற்றிய போது அங்கு படித்து வந்த ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
மேலும் இதுபற்றி வெளியே கூறினால் உனது தந்தையை கொன்றுவிடுவதாக மாணவியை மிரட்டி உள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர், கொண்டோட்டி போலீஸ் நிலையத்தில் அபுபக்கர் சித்திக் மீது புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே தகவல் அறிந்து அபுபக்கர் சித்திக் தலைமறைவாகிவிட்டார். இந்தநிலையில் அபுபக்கர் சித்திக்கை கண்டுபிடித்து கைது செய்ய அவர் மீது போலீசார் லுக்-அவுட் நோட்டீஸ் வெளியிட்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?