மாதவரத்தில் போதைப் பொருள்: அண்ணன் – தம்பி உள்பட 5 பேர் கைது

மாதவரத்தில் போதைப் பொருள்: அண்ணன் – தம்பி உள்பட 5 பேர் கைது

சென்னை, ஆக. 23–


மாதவரத்தில் போதைப் பொருள் வைத்திருந்து அண்ணன் – தம்பி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.


சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு போதைப்பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு குற்றவாளிகளையும், வலைபின்னல் தொடர்புகளில் உள்ளவர்களையும் கண்டறிந்து கைது செய்து, உரிய நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது.


இதன் தொடர்ச்சியாக, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தனிப்படையினர் மற்றும் மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருடன் ஒருங்கிணைந்து, மாதவரம் அருள் நகர் மைதானம் அருகில் கண்காணித்து, அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 5 நபர்களை விசாரணை செய்து, சோதனை செய்தபோது, அவர்கள் மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.


அதன்பேரில், மாதவரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, போதைப்பொருள் வைத்திருந்த ஐஸ்வர், இவரது தம்பி அபிஷேக், லிங்கேஸ்வரன், வசந்தராஜ், ரிக்கி ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7.3 கிராம் மெத்தம்பெட்டமைன், 23 எம்டிஎம்ஏ மாத்திரைகள்,1 இருசக்கர வாகனம், 5 செல்போன்கள் மற்றும் 2 எடை இயந்திரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 5 பேரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%