மீனவர்களுக்கு ரூ.6.40 கோடி மதிப்பீட்டில் ஆமை விலக்கு சாதனங்கள்; தமிழக அரசு தகவல்

மீனவர்களுக்கு ரூ.6.40 கோடி மதிப்பீட்டில் ஆமை விலக்கு சாதனங்கள்; தமிழக அரசு தகவல்


 

சென்னை,


தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இனப்பெருக்கத்திற்காக கடற்கரைக்கு வரும் கடல் ஆமைகளை மீன்பிடி இழுவலைகளிலிருந்து பாதுகாத்திட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் மீனவர்களுக்கு ரூ.6.40 கோடி மதிப்பீட்டில் ஆமை விலக்கு சாதனங்களை (Turtle Excluder Device) விலையில்லாமல் வழங்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


ஒவ்வோர் ஆண்டும் கடல் ஆமைகளின் இனப்பெருக்க காலமான ஜனவரி 1 முதல் ஏப்ரல் 30 முடிய, கடல் ஆமைகள் முட்டையிடும் தமிழ்நாடு கடற்பகுதியில் அவற்றை பாதுகாத்திடும் பொருட்டு, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றுள் முக்கியமாக கடற்கரையிலிருந்து 5 கடல் மைல்களுக்குள் மீன்பிடிவிசைப்படகுகள் மீன்பிடிப்பில் ஈடுபடுவதையும், கடல் ஆமைகள் முட்டையிடும் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் 10 குதிரை திறனுக்கும் அதிகமான திறன் கொண்ட இயந்திரம் பொருத்தப்பட்ட பாரம்பரிய மீன்பிடி படகுகள் மீன்பிடிப்பில் ஈடுபடுவதையும் மற்றும் திருக்கை மீன் வலைகள் பயன்படுத்துவதையும் தடைசெய்துள்ளது.


மேலும், கடல் ஆமைகளை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட பணிக்குழுவின் (Nodal Task Force) வழிகாட்டுதல்களின்படி, கூட்டு ரோந்து மேற்கொள்ளப்பட்டும் மற்றும் 5 கடல் மைல்களுக்குள் மீன்பிடிப்பில் ஈடுபடும் விசைப்படகுகளின் இயக்கத்தினை ISRO டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்பட்ட நப்மித்ரா இணையவழி செயலி மூலம் கண்காணித்தும், கடல் ஆமைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. மேற்கண்ட ரோந்து மற்றும் கடுமையான கண்காணிப்பின் அடிப்படையில், விதிமுறைகளை மீறி செயல்படும் மீன்பிடி படகுகள் மீது தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின்படி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, மேல் நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது. மேலும், வனத்துறை, கடலோர பாதுகாப்பு குழுமம், கடலோர காவற்படை, மீன்பிடி படகு உரிமையாளர்கள் சங்கம், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் மீனவ கிராம பஞ்சாயத்து தலைவர்களை இணைத்து, மீனவ கிராமங்களில் கடல் ஆமை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. ஆமைகளின் நடப்பு இனப்பெருக்க காலகட்டத்தில் இதுபோன்ற 270 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%