மூதாட்டியிடம் 6 பவுன் நகை திருடி செல்போன் வாங்கிய வாலிபர் கைது
Oct 23 2025
20

சென்னை, அக்.22–
சென்னை கோடம்பாக்கம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் 6 பவுன் நகையை திருடிய வாலிபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
சென்னை, கோடம்பாக்கம், பாரதீஸ்வரர் காலனியில் மூதாட்டி ஜெயலட்சுமி(வயது 79) என்பவர் தனியாக வசித்து வருகிறார். கடந்த 20–ந் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவரது மகன் கணபதி சுப்பிமணியனிடம் கொடுப்பதற்காக பூஜை அறையில் வைத்திருந்த சுமார் 6 சவரன் எடையுள்ள தங்க நெக்லஸ் மற்றும் தங்க கம்மலை எடுக்க சென்ற போது, தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து ஜெயலட்சுமியின் மகன் கணபதி சுப்பிரமணியன் என்பவர் ஆர்-8 வடபழனி காவல் நிலைய குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
வடபழனிகாவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்ததில் கடந்த 16–ந் தேதி அன்று ஜெயலட்சுமி வீட்டை சுத்தம் செய்த, அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் கரண் என்ற ஒரு வாலிபர், மூதாட்டி வீட்டில் தங்க நகைகளை திருடியது தெரியவந்ததின் பேரில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி இந்த வழக்கில் தொடர்புடைய கரணை (வயது 22) கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய 17 வயது சிறுவனிடம் போலீசார் விசாரணை செய்தனர்.
விசாரணையில் குற்றவாளிகள் இந்த வீட்டில் திருடிய தங்க நகைகளை அடகு வைத்து ரூ.1,60,000 - பணம் பெற்று 2 ஆப்பிள் ஐ-போன்கள் வாங்கியுள்ளது தெரியவந்தது.
அதன் பேரில் அடகு கடையிலிருந்துசுமார் 6 சவரன் தங்க நகைகள் மற்றும் அடகு வைத்து கிடைத்த பணத்தில் வாங்கிய 2 ஐபோன்கள் மற்றும் செலவு செய்தது போக மீதமிருந்த பணம் ரூ.54,000 - மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட கரண் விசாரணைக்குப் பின்னர், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். சிறுவன் இன்று சிறார் நீதிகுழுமத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?