உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு பிறந்த நாள்: பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து
Oct 23 2025
18

புதுடெல்லி,
அமித்ஷா நீண்ட காலம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று மோடி பதிவிட்டுள்ளார்.
உள்துறை மந்திரி அமித்ஷா இன்று தனது 61வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு அமித்ஷாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “அமித்ஷாவுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள். பொதுச்சேவையில் அமித்ஷா காட்டும் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்காக பலராலும் பாராட்டப்படும் நபராக உள்ளார்.
நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் ஒவ்வொரு இந்தியரும் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்துடன் வாழ்வதை உறுதி செய்யவும் அவர் மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டத்தக்கது. அமித்ஷா நீண்ட காலம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “உள்துறை மந்திரிக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள். தேசிய பாதுகாப்பு மற்றும் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான உங்கள் உறுதியான தலைமை, அயராத அர்ப்பணிப்பு உண்மையிலேயே பாராட்டத்தக்கது. தேசத்திற்கான சேவையில் தொடர்ந்து வெற்றி கிடைக்கவும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சியையும் இறைவன் வழங்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?