மேகாலயா சுரங்க வெடிவிபத்து வேதனை தருகிறது; ஜனாதிபதி இரங்கல்

மேகாலயா சுரங்க வெடிவிபத்து வேதனை தருகிறது; ஜனாதிபதி இரங்கல்


 

புதுடெல்லி,


மேகாலயாவின் கிழக்கு ஜைந்தியா ஹில்ஸ் மாவட்டத்தின் தங்க்ஸ்கை பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சந்தேகத்திற்குரிய வகையிலான இந்த சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் தொழிலாளர்கள் பலர் மிக குறுகிய பகுதியில் சுரங்க பணியில் ஈடுபட்டு இருந்தபோது, வெடிவிபத்து ஏற்பட்டதில் அவர்கள் சிக்கி கொண்டனர்.


நுழைவு பகுதியில் பாறைகள் விழுந்து மூடியதில், உள்ளே இருந்தவர்களால் வெளியே வர முடியவில்லை. இதில் பலர் உயிரிழந்தனர். இதுபற்றி போலீஸ் சூப்பிரெண்டு விகாஸ் குமார் கூறும்போது, 16 உடல்களை இதுவரை மீட்டுள்ளோம். ஒருவர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளார்.


 

தொழிலாளர்கள் பலர் உள்ளே சிக்கி கொண்டுள்ளனர். மாநில பேரிடர் மீட்பு படை, போலீசார் மற்றும் அரசு நிர்வாகத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என கூறினார். இந்த சம்பவத்தில், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.


பலியானோரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், காயமடைந்த நபருக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரண தொகை வழங்கப்படும் என அறிவித்து உள்ளார். இந்த நிதி பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து அளிக்கப்படும்.


இந்த சம்பவத்தில் பலி 18 எண்ணிக்கை ஆக உயர்வடைந்து உள்ளது. இதுபற்றி மேகாலயா முதல்-மந்திரி கன்ராட் சங்மாவை, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசி, விவரங்களை கேட்டறிந்து உள்ளார். நிலைமையை ஆய்வு செய்த அவர் சாத்தியப்பட்ட உதவிகளை மத்திய அரசு வழங்கும் என்றார்.


இதேபோன்று உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் தொகை வழங்கப்படும் என முதல்-மந்திரி சங்மா அறிவித்து உள்ளார். இந்த சம்பவம் பற்றி குறிப்பிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்து உள்ளார். மேகாலயாவின் கிழக்கு ஜைந்தியா ஹில்ஸ் மாவட்டத்தில், துரதிர்ஷ்டவசத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி தொழிலாளர்கள் உயிரிழந்தது பற்றிய செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன்.


இந்த விபத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்த நபர்கள் விரைவில் குணமடைய வேண்டி கொள்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.


-----------

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%