மொடக்குறிச்சி வட்டம், குளூர் ஊராட்சி, செங்கரைப்பாளையத்தில் காந்தி ஜெயந்தி விழா

*அன்புடையீர் வணக்கம். 02.10.2025 வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் மொடக்குறிச்சி வட்டம், குளூர் ஊராட்சி, செங்கரைப்பாளையத்தில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர்களுக்கு சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்த உண்டியல்கள் வழங்கப்பட்டது. தோட்டக்காட்டு நல்லப்பகவுண்டர் அறக்கட்டளையின் 19-ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு 100 மாணவ மாணவியர்களுக்கு தலா ஒரு உண்டியல் வீதம் இலவசமாக வழங்கப்பட்டது.*
*விழாவில் அறக்கட்டளை தலைவர் வி.பொன்னுசாமி அவர்கள் தலைமையில் அறக்கட்டளை உறுப்பினர்கள் எஸ்.பி.சுந்தரம், சி.தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் அறக்கட்டளை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் அவர்கள் வரவேற்றார். குளூர் ஊராட்சி முன்னாள் தலைவர் ஜி.செல்வராஜ் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு 100 மாணவ மாணவியர்களுக்கு உண்டியல்களை வழங்கி, "உண்டியலில் பணம் சேர்த்து புத்தகத் திருவிழாவில் அதிக அளவு புத்தகங்கள் வாங்கினீர்கள்" என்றால், "அடுத்த ஆண்டு 500 உண்டியல்கள் நமது ஊராட்சி முழுவதும் உள்ள மாணவச் செல்வங்களுக்கு வழங்கப்படும்" என உறுதி கூறினார். விழாவில் அறக்கட்டளை தாய்மார்கள் மற்றும் உள்ளூர் பெற்றோர்கள், பள்ளி ஆசிரியை எம்.வசந்தா உட்பட பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர். அறக்கட்டளை உறுப்பினர் சி.மனோகரன் அவர்கள் நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.*
*நன்றி! வணக்கம்!*
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?