யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக், ஜன்னிக் சின்னர் முன்னேற்றம்

யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக், ஜன்னிக் சின்னர் முன்னேற்றம்

நியூயார்க்: ​

யுஎஸ் ஓபன் கிராண்ட்​ஸ்​லாம் டென்​னிஸ் போட்​டி​யின் 4-வது சுற்​றுக்கு போலந்து வீராங்​கனை இகா ஸ்வி​யாடெக், இத்​தாலி வீரர் ஜன்​னிக் சின்​னர் ஆகியோர் முன்​னேறி​யுள்​ளனர்.


யுஎஸ் ஓபன் கிராண்ட்​ஸ்​லாம் டென்​னிஸ் போட்டி அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் நடை​பெற்று வரு​கிறது. நேற்று முன்​தினம் நடை​பெற்ற ஆடவர் ஒற்​றையர் பிரிவு 3-வது சுற்றுபோட்​டி​யில் முதல் நிலை வீர​ரான ஜன்​னிக் சின்​னர், தரவரிசை​யில் 27-ம் நிலை​யில் இருக்​கும் கனடா வீரர் டெனிஸ் ஷபோவலோவுடன் மோதி​னார். இந்த ஆட்​டத்​தில் ஜன்​னிக் சின்​னர் 5-7, 6-4, 6-3, 6-3 என்ற கணக்​கில் வெற்றி பெற்று 4-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார்.


முதல் செட்டை டெனிஸ் ஷபோவலோவ் 7-5 என்ற கணக்​கில் கைப்​பற்​றி​னார். ஆனால், அடுத்த 3 செட்​களி​லும் சுதா​ரித்து விளை​யாடி வெற்​றியை வசப்​படுத்​தி​னார் சின்​னர். 4-ம் நிலை வீர​ரான கஜகஸ்​தானின் அலெக்​சாண்​டர் பப்​ளிக் 7-6 (7/5), 6-7 (4/7), 6-3, 6-7 (5/7), 6-1 என்ற செட் கணக்​கில் அமெரிக்​கா​வின் டாமி பாலை தோற்​கடித்​தார்.


3-வது சுற்று ஆட்​டம் ஒன்​றில் 10-ம் நிலை வீர​ரான இத்​தாலியின் லாரன்ஸோ முசெட்​டி​யும், 24-ம் நிலை வீர​ரான இத்​தாலி​யின் பிளே​வியோ கோபோலி​யும் மோதினர். இதில் 6-3, 6-2, 2-0 என்ற கணக்​கில் முசெட்டி முன்​னிலை​யில் இருந்​த​போது, ஆட்​டத்​திலிருந்து பிளே​வியோ கோபோலி வில​கி​னார். இதையடுத்து முசெட்டி வெற்றி பெற்​ற​தாக அறிவிக்​கப்​பட்​டார்.


25-ம் நிலை வீர​ரான கனடா​வின் பெலிக்ஸ் ஆகர் அலி​யாசிம் 4-6, 7-6 (9/7), 6-4, 6-4 என்ற செட் கணக்​கில் 3-ம் நிலை வீர​ரான அலெக்​சாண்​டர் ஸ்வரேவை அதிர்ச்​சித் தோல்​வி​யுறச் செய்​தார். 15-ம் நிலை வீர​ரான ஆந்த்ரே ரூபலேவ்​(ரஷ்​யா) 2-6, 6-4, 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்​கில் ஹாங்​காங்​கின் கோல்​மேன் வாங்கை சாய்த்​தார்.


மகளிர் பிரிவு: மகளிர் பிரிவு 3-வது சுற்​றில் போலந்து வீராங்​கனை இகா ஸ்வி​யாடெக் வெற்றி பெற்று 4-வது சுற்​றுக்​குத் தகுதி பெற்​றார். 2-ம் நிலை வீராங்​கனை இகா ஸ்வி​யாடெக் 7-6 (7/2), 6-4 என்ற செட் கணக்​கில் 29-ம் நிலை வீராங்​க​னை​யான ரஷ்​யா​வின் அன்னா காலின்​ஸ்​க​யாவை தோற்​கடித்​தார்.


8-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் அமண்டா அனிசிமோவா 6-4, 4-6, 6-2 என்ற செட் கணக்​கில் ருமேனி​யா​வின் ஜாக்​குலின் கிறிஸ்​டியனை​யும், 18-ம் நிலை வீராங்​க​னை​யான பிரேசிலின் பீட்​ரிஸ் ஹட்​டாட் மையா 6-1, 6-2 என்ற செட் கணக்​கில் கிரீஸ் நாட்​டின் மரியா சக்​காரியை​யும், 13-ம் நிலை வீராங்​க​னை​யான ரஷ்​யா​வின் இகாட்​டெரினா அலெக்​சான்ட்​ரோவா 6-0, 6-1 என்ற கணக்​கில்​ ஜெர்​மனி​யின்​ லாரா சீஜ்​முண்​டை​யும்​ வீழ்​த்​தினர்​.


பாம்ப்ரி-வீனஸ் ஜோடி வெற்றி: யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நியூஸிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி வெற்றி பெற்றுள்ளது.


நேற்று முன்தினம் நடைபெற்ற ஆடவர் இரட்டையர் முதல் சுற்றுப் போட்டியில் பாம்ப்ரி-மைக்கேல் ஜோடி 6-0, 6-3 என்ற நேர் செட்களில் மார்க்கோஸ் கிரோன், லேர்னல் டியன் ஜோடியை வீழ்த்தியது.


மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, மொனாக்கோவின் ரொமெய்ன் அர்னீடோ ஜோடி 4-6, 3-6 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ராபர்ட் கேஷ், ஜேம்ஸ் டிராசி ஜோடியிடம் தோல்வி கண்டது. மற்றொரு இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் அர்ஜுன் கதே, ஈக்வடாரின் டியாகோ ஹிடால்கோ ஜோடி 7-5, 6-7(4), 4-6 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் மேட் பாவிக், எல் சால்வடாரின் மார்செலோ அரேவலோ ஜோடியிடம் வீழ்ந்தது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%